மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 பிப் 2021

அதிமுக விருப்ப மனு அறிவிப்பு: விரைவில் தேர்தல் அறிவிக்கை!

அதிமுக விருப்ப மனு அறிவிப்பு: விரைவில் தேர்தல் அறிவிக்கை!

வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அதிகாரபூர்வமாக அதிமுக தொடங்கிவிட்டது. வழக்கம்போல தேர்தல் பணிகளை மற்ற கட்சிகளை விட முன்கூட்டியே தொடங்கிவிட்டது அதிமுக.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு பெறுவதற்கான அறிவிப்பை இன்று (பிப்ரவரி 15) ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

“தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மற்றும் புதுச்சேரி,கேரள மாநில சட்டமன்ற தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகிற கழக உடன்பிறப்புகள் தலைமை கழகத்தில் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மார்ச் 5ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு விண்ணப்பப்படிவங்கள் பெற்றுக் கொள்ளலாம்” என்று அதிமுக தலைமைக் கழக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு விருப்ப மனுக் கட்டணம் 15 ஆயிரம் ரூபாய் என்றும் புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலுக்கு விருப்ப மனு கட்டணம் 5000 ரூபாய் என்றும் கேரள மாநில சட்டமன்ற தேர்தலுக்கு விருப்ப மனு கட்டணம் இரண்டாயிரம் ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி நேற்று சென்னை வந்து சென்ற நிலையில் இன்று முதல் அதிமுக தனது சட்டமன்ற தேர்தல் பணியை அதிகாரப்பூர்வமாக விரைந்து தொடங்கிவிட்டது.

ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி முதல் விருப்ப மனு கட்டணம் வாங்கப்படும் என்ற ஆளுங்கட்சியின் அறிவிப்பு, விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

-வேந்தன்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

திங்கள் 15 பிப் 2021