மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 பிப் 2021

துரைமுருகனுக்கு ஸ்டாலின் போட்ட தடை!

துரைமுருகனுக்கு ஸ்டாலின் போட்ட தடை!

திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கும், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கும் இடையே அவ்வப்போது ஊடலும் கூடலும் நிகழ்வது அறிவாலய வட்டாரத்தில் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இப்போது மீண்டும் ஒரு முறை தினம் ஒருமுறை துரைமுருகனுக்கும் ஸ்டாலினுக்கும் இடையே ஓர் ஊடல் ஏற்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில் வெளிப்படையாக துவங்க இருக்கின்றன. எப்போதுமே இது மாதிரியான கூட்டணி பேச்சுவார்த்தைகளில் துரைமுருகன் முக்கிய பங்கு வகிப்பார்.

அப்படிப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது கூட்டணி கட்சிகளை நோக்கி துரைமுருகன் வீசும் கமென்ட்டுகள் கூட்டணி வட்டாரத்தில் குளறுபடிகளையும் ஏற்படுத்தியது உண்டு.

சிறு சிறு கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக பிரதிநிதிகளுடன் வரும்போது அவர்களைப் பார்த்து துரைமுருகன்... " என்னய்யா மொத்த கட்சிக்காரங்களையும் கூட்டிட்டு வந்துட்டீங்களா!" என்று கேட்டுவைப்பார். தனது சக நிர்வாகிகளுடன் வரும் கூட்டணி கட்சி தலைவருக்கு துரைமுருகனின் இந்த கமெண்ட் சுருக்கென்று தைக்கும்.

இதேபோல... சில கட்சிகள் சீட்டுகளின் எண்ணிக்கை பற்றி கேட்கும்போது, “ இவ்வளவு சீட்டு கேட்கிறீர்களே போட்டியிட ஆள் இருக்கானு பாத்துக்கங்க” என்றும் நகைச்சுவை என நினைத்துக்கொண்டு துரைமுருகன் வீசும் வார்த்தைகள் கூட்டணிக்குள்ளே கசப்பை ஏற்படுத்திய சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

சமீபத்தில் கூட ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில்... "திமுக கூட்டணிக்கு இன்னும் சில பேர் வருவான். இங்கிருந்த சிலபேர் போவான்"என்று கூறி சர்ச்சைகளை சம்பாதித்துக் கொண்டார் துரைமுருகன்.

இந்தப் பின்னணியில்தான் வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தைகளின் போது துரைமுருகன் இடம் பெற வேண்டாம் என்று ஸ்டாலின் கருதியுள்ளார். இந்த காரணம் மட்டுமல்ல திமுகவின் பொதுச் செயலாளராக இருக்கும் நிலையில் இதுபோன்ற பேச்சுவார்த்தைகளை அடுத்த அடுத்த கட்ட தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் ஸ்டாலின் கருதுகிறார்.

இந்த தகவலை துரைமுருகனிடம் ஸ்டாலின் நேரடியாக சொல்லாமல் முருகனுக்கு மிகவும் நெருக்கமான முரசொலி செல்வம் மூலம் அவருக்கு தெரியப்படுத்தியுள்ளார். முரசொலி செல்வமும், துரைமுருகனும் நீண்ட நெடிய நண்பர்கள். மனம் விட்டு பேசிக்கொள்ளக் கூடியவர்கள். அதனால் அவர் மூலமாக இந்த செய்தியை துரைமுருகனிடம் சேர்த்திருக்கிறார் ஸ்டாலின்.

இதைக் கேட்ட துரைமுருகன், “இப்பவே எனக்கு வாய்ப்பூட்டு போட்டுட்டாங்களாய்யா?” என்று அதற்கும் ஒரு கமென்ட் அடித்திருக்கிறார்.

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

திங்கள் 15 பிப் 2021