மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 பிப் 2021

மோடி-ஓபிஎஸ்-எடப்பாடி: தனிமையில் சந்திக்க ஏற்பாடு!

மோடி-ஓபிஎஸ்-எடப்பாடி: தனிமையில் சந்திக்க ஏற்பாடு!

பிரதமர் மோடி வருகிற 14ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை விமானம் மூலம் சென்னை வருகிறார். பிரதமர் சென்னையில் கலந்துகொள்கிற நிகழ்ச்சி வெறும் மூன்று மணி நேரத்துக்கு மட்டுமே திட்டமிடப்பட்டிருக்கிறது என்றாலும், அதிலும் ஓர் அரசியல் முக்கியத்துவம் இருக்கிறது என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

மோடி சென்னை விமான நிலையத்தை வந்தடைந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ். விமானப் படைத் தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பல்வேறு திட்டங்கள் துவக்க விழா நடக்கும் நேரு ஸ்டேடியத்துக்கு செல்கிறார். அப்போது மோடியுடன் தமிழக முதல்வர் எடப்பாடியும் ஒரே காரில் செல்ல ஒரு திட்டமிருக்கிறது என்கிறார்கள்.

வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் போக்குவரத்தையும் தொடங்கி வைக்கிறார்.

நேரு ஸ்டேடியத்தில் க்ரீன் ரூம் எனப்படும் உள்ளறை ஒன்று உள்ளது.இந்த அறையில் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஒன்றாக உட்கார்ந்து சில நிமிடங்கள் ஆலோசனை செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.

சசிகலா தொடர்பாக முதல்வர் எடப்பாடி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பொதுவெளியில் கடும் கண்டனத்தோடு பல கருத்துகளை சொல்லி வருகிறார். ஆனால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் இதுவரை சசிகலா விடுதலை பற்றியோ அவர் அதிமுக கொடியை பயன்படுத்தியது பற்றியோ எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதன் மூலம் அவர் வேறொரு கருத்தைக் கொண்டிருக்கிறாரோ என்ற கேள்வியும் கட்சிக்குள்ளும் வெளியேயும் எழுந்துள்ளது.

இந்த நிலையில்தான் நாளை பிப்ரவரி 14ஆம் தேதி பிரதமருடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒன்றாக ஆலோசனை நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அமித் ஷா சென்னை வந்தபோதும் லீலா பேலஸ் ஹோட்டலில் இருவரும் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

சனி 13 பிப் 2021