மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 பிப் 2021

ஆவுடையப்பனை அசைத்துப் பார்க்கிறாரா படையப்பன்? அம்பை திமுக ஹாட்

ஆவுடையப்பனை அசைத்துப் பார்க்கிறாரா படையப்பன்? அம்பை திமுக ஹாட்

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வேட்பாளர் யார் என்பதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உருவாகி வருகின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை ஐபேக் மூலம் வேட்பாளர் தேர்வுகள் நடக்கின்றன என்றும், ஐபேக் ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று முதல் ஐந்து நபர்களை தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது என்றும் அதில் இருந்துதான் வேட்பாளர்களை திமுக தலைவர் ஸ்டாலின் டிக் செய்கிறார் என்றும் திமுக வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

இந்த வகையில் நெல்லை மாவட்டம் அம்பா சமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தற்போதைய நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளரும், இத்தொகுதியில் 2016 தேர்தலில் நின்றவருமான முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தான் வேட்பாளர் என்று திமுகவில் பலரும் கூறி வந்தார்கள். ஆனால் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது,

“நம்முடைய கூட்டணி இப்படியே தொடர வேண்டும் என்பதில் நீங்கள் விருப்பமாக இருக்கிறீர்கள். நானும் இதையே விரும்புகிறேன்.கடந்த ஐந்து வருடமாக நம்முடைய ஒவ்வொரு போராட்டத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் கூட்டணிக் கட்சிகளும் நம்மோடு சேர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். போராடி வருகிறார்கள். இப்படி நம்மோடு நிற்கும் கூட்டணிக் கட்சிகளை நாம் விட முடியாது... விடக்கூடாது. மாவட்ட செயலாளர்கள் ஆகிய நீங்களும் இந்தக் கூட்டணி தொடர வேண்டும் என்கிறீர்கள். ஆனால் கூட்டணிக் கட்சிகளுக்கு சீட்டை குறைவாக கொடுங்கள் என்று சொல்கிறீர்கள். நாம் சீட்டுகளை எப்படி பங்கிட்டுக் கொடுத்தாலும் நம்முடைய சில மாவட்ட செயலாளர்களுக்கு கூட சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். அப்படி உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் உங்கள் மாவட்டத்தில் இருக்கிற தொகுதிகளை ஜெயிக்க வைத்துக் கொண்டு வரவேண்டும். உங்களில் சிலர் தேர்தலில் போட்டியிடா விட்டாலும்... நம்முடைய தொகுதிகளையும் கூட்டணிக் கட்சி தொகுதிகளையும் ஜெயிக்க வைத்தால் உங்களுக்கு என குறிப்பிட்ட மார்க் போடுவேன் ஆட்சி அமைந்ததும் அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் வாய்ப்பு இல்லாவிட்டாலும் வேறு வகையில் முக்கியமான பதவிகள் வழங்கப்படும்.. எனவே நான் போட்டியிடவில்லை திமுக போட்டியிடவில்லை என்று புறக்கணிக்காமல் அனைத்து தொகுதிகளும் நம்முடைய தொகுதிகள் தான் என்ற உணர்வோடு வெற்றியைக் கொண்டு வாருங்கள்”என்று குறிப்பிட்டார்.

அந்த மாசெக்கள் கூட்டத்தில் இருந்து எந்த மாவட்டச் செயலாளருக்கு வாய்ப்பு பறிபோகுமென்ற விவாதம் திமுகவின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பாக எழுந்திருக்கிறது.

இந்த நிலையில்தான் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளரும் சீனியருமான ஆவுடையப்பனுக்கு வரும் தேர்தலில் அம்பாசமுத்திரம் என்ற அசைக்க முடியாத பேச்சை ஒரு இளைஞர் அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் நெல்லை திமுக வட்டாரத்தில்.

இதுபற்றி திமுகவினரிடம் விசாரித்தபோது, “அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த அஜய் படையப்ப சேதுபதி என்ற இளைஞர் சென்னையில் தொழில் செய்து வருகிறார். ஜமீன் பரம்பரை என்ற கெத்தில் தொகுதி முழுக்க செலவு செய்து வருகிறார். அஜய் படையப்ப சேதுபதியார் அறக்கட்டளை என்ற தனது அறக்கட்டளையின் பெயரில் கொரோனா தீவிரமான காலகட்டத்தில் இருந்தே அவர் அம்பாசமுத்திரம் பகுதியில் ஆயிரக்கணக்கான பேர்களுக்கு மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கியிருக்கிறார்.

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி செய்திருக்கிறார். இப்போது அம்பாசமுத்திரம் தொகுதிக்குட்பட்ட 50 ஆயிரம் பேருக்கு தன் சொந்த செலவில் திருநெல்வேலி மாவட்டத்துக்குட்பட்ட 19 மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்கும் வகையில் காப்பீட்டுத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். மேலும் தொகுதியில் இருக்கும் கிட்டத்தட்ட பெரும்பாலான வழக்கறிஞர்களை அழைத்து ஒரு சந்திப்பு நடத்தி அவர்களுக்கு தேவையான சட்டப் புத்தகங்கள் உள்ளிட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இவ்வளவையும் செய்வது தனது மக்களுக்கான சேவை என ஒருபக்கம் இருந்தாலும், ஆவுடையப்பனுக்கு எதிர் தரப்பைச் சேர்ந்த திமுகவினரே, ‘இந்தப் பையனை ஏன் அம்பாசமுத்திரத்துல நிறுத்தக் கூடாது?’ என்ற கேள்வியை கட்சிக்குள் கேட்டு விவாதத்தை உண்டாக்கியிருக்கிறார்கள்.

ஐபேக் பார்வையிலும் படையப்பன் இருக்கிறார் என்றும் இவர் எவ்விதத் திட்டமும் இல்லாமல் செய்த சேவைகள் மக்களிடத்தில் நல்ல பெயரை ஏற்படுத்தியிருக்கின்றன என்றும் தகவல்கள் சென்னைவரை போயிருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆவுடையப்பன் கலைஞரின் மிக நீண்ட கால விசுவாசி. தளபதிக்கும் நல்ல உறவில்தான் இருக்கிறார். கடந்த வாரம் திமுக தலைவர் அம்பாசமுத்திரம் வந்தபோது, ‘சம்பந்தியின் மாவட்டத்துக்கு வருகை தந்திருக்கும் தலைவரை வரவேற்கிறோம்’ என்று பேசினார் ஆவுடையப்பன். அதாவது அம்பாசமுத்திரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில்தான் சபரீசனின் சொந்த ஊரான அரியநாயகி புரம் இருக்கிறது. அதை சொல்லி தலைவரை வரவேற்க வேண்டிய நிலையில் இருக்கிறார் ஆவுடையப்பன். இந்த நிலையில்தான் அம்பாசமுத்திரத்தை அஜய் படையப்ப சேதுபதி போன்ற இளைஞர்களும் குறிவைத்திருக்கிறார்கள். முடிவு என்னவோ தலைவர் எடுக்க வேண்டியதுதான்” என்கிறார்கள்.

-வேந்தன்

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

சனி 13 பிப் 2021