மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 பிப் 2021

ஒரு பக்கம் வைகோ- மறுபக்கம் துரை வைகோ- மதிமுகவில் மாற்றம்!

ஒரு பக்கம் வைகோ- மறுபக்கம் துரை வைகோ- மதிமுகவில் மாற்றம்!

மதிமுகவின் பொதுச் செயலாளரான வைகோவின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பிப்ரவரி 3 ஆம் தேதி நடந்தபோது அதில் பேசிய பலரும், வைகோவின் மகன் துரை வைகோ கட்சியில் முக்கியப் பொறுப்புக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் துரை வைகோ நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

இதுபற்றி மின்னம்பலத்தில் வைகோ மகன் வரவேண்டும்; மாவட்டச் செயலாளர்கள் ‘நிறைவேற்றிய’தீர்மானம்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தக் கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, ஏ.கே.மணி மற்றும் அரசிய ஆய்வு மைய செயலாளர் செந்திலபதிபன் மற்றும் பல மாசெக்கள் கட்சிக்குள் துரை வைகோவின் வருகைக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசெக்கள் கூட்டத்தின் ரியாக்‌ஷன் பிப்ரவரி 12 ஆம் தேதி நெல்லையில் நடந்த தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் தெரிந்தது.

அந்தப் பொதுக் கூட்ட மேடையில் அமைக்கப்பட்டிருந்த பின்னணிப் பதாகையில் ஒருபக்கம் வைகோவின் படமும், இன்னொரு பக்கம் துரை வைகோவின் படமும் அமைக்கப்பட்டிருந்தது. கட்சியின் பொதுக்கூட்டத்தில் அதிகாரபூர்வமாக துரை வைகோவின் படம் வைக்கப்படுவதும், வைகோ படத்துக்குப் பக்கத்தில் துரை வைகோவின் படம் பல வரவேற்பு பேனர்களில் இடம்பெற்றிருப்பதும் வைகோவின் ஒப்புதலோடு அல்லது எதிர்ப்பு இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக நடந்திருக்கிறது.

இதுகுறித்து தென் மாவட்ட மதிமுக மாசெக்களிடம் பேசியபோது,

“ ஏற்கனவே கட்சியினரின் திருமண பத்திரிகைகளில் துரை வைகோ படம் போடுகிறோம். 2021 ஆம் ஆண்டுக்கு தமிழகம் முழுதும் துரை வைகோ படம் போட்ட காலண்டர்கள் அச்சிட்டுள்ளோம். கடந்த பிப்ரவரி 3 மாவட்டச் செயலாளகள் கூட்டத்தில் துரை வைகோவின் அதிகாரபூர்வ அரசியல் வருகையை வலியுறுத்தினோம். அதை தலைவரும் ஏற்றுக் கொண்டார். அதன் விளைவாகவே இந்த மேடையில் துரை வைகோவின் படத்தைப் பயன்படுத்தியுள்ளோம். தலைவரும் பார்த்தார். ஒன்றும் சொல்லவில்லை.

மேலும் சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் கட்சியில் நிர்வாக மாற்றம் ஏற்படும் என்று இந்த கூட்டத்தில் வைகோ கூறியுள்ளார். அதன் அர்த்தம் துரை வைகோவுக்கு மிக முக்கியமான கட்சிப் பதவி வழங்கப்பட இருக்கிறது என்பதுதான்” என்கிறார்கள்.

-ஆரா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

சனி 13 பிப் 2021