மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 பிப் 2021

சசிகலாவுக்கு கொடுத்த காரை திரும்பப் பெற்ற அதிமுக நிர்வாகி!

சசிகலாவுக்கு கொடுத்த காரை திரும்பப் பெற்ற அதிமுக நிர்வாகி!

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வர கார் வழங்கிய பதவிநீக்கம் செய்யப்பட்ட அதிமுக மாவட்ட துணை செயலாளர் தட்சிணாமூர்த்தி தனது காரை இன்று (பிப்,12) திரும்ப பெற்றுச் சென்றார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த மாதம் 27ஆம் தேதி விடுதலையான சசிகலா, கொரானாவால் பாதிக்கப்பட்டு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து அதிமுக கொடி கட்டிய காரில் புறப்பட்டு பெங்களூர் புறநகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஒருவாரம் சசிகலா தங்கியிருந்தார்.

இந்த நிலையில், அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவது சட்டவிரோதம் என அதிமுக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் செய்திருந்தனர்.

கடந்த 8ஆம் தேதி சசிகலா பெங்களூரில் இருந்து ஜெயலலிதா பயன்படுத்தி வந்த அதிமுக கொடிகட்டிய காரில் சென்னை புறப்பட்டார். கார் தமிழக எல்லையை அடைந்தபோது வழிமறித்த கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார், அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து அதிமுக கொடிகொட்டிய மற்றொரு காரில் ஏறி சசிகலா சென்னை வந்தார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கார் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக துணை செயலாளர் தட்சிணாமூர்த்தியின் கார் என தெரியவந்தது.

இதையடுத்து கட்சி விரோத நடவடிக்கைளில் ஈடுபட்டதாக கூறி தட்சிணாமூர்த்தி அதிமுகவின் அடிப்படை உரிமை உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார்.

சசிகலா சென்னை வந்த தட்சிணாமூர்த்தியின் கார் , சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் சசிகலா வசிக்கும் வீட்டில் கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்று சசிகலா வசிக்கும் வீட்டுக்கு வந்த தட்சிணாமூர்த்தி தனது காரை திரும்ப பெற்றுச்சென்றார்.

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வெள்ளி 12 பிப் 2021