மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 பிப் 2021

விரைவில் மக்களிடம் வருவேன் -விஜயகாந்த்

விரைவில் மக்களிடம் வருவேன் -விஜயகாந்த்

தேமுதிக பொதுச் செயலாளரான விஜயகாந்த் இன்று (பிப்ரவரி 12) அக்கட்சியின் கொடி நாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்துக்கு திறந்த வேனில் வந்து கொடியேற்றினார்.அப்போது தொண்டர்களிடம் சில வார்த்தைகள் பேசினார்.

விஜயகாந்த்தை நேரில் பார்த்த தொண்டர்கள் வாழ்க வாழ்க வெனெ முழக்கமிட்டு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். அப்போது மைக்கைப் பிடித்த விஜயகாந்த், “ என் தொண்டர்களையும், என் மக்களையும் சந்திக்க விரைவில் வரப் போகிறேன்”என்று கையை உயர்த்தினார். இதைப் பார்த்து தொண்டர்கள் ஆரவாரித்தனர்.

கொடிநாள் நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்,

“அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி என எந்தக் கூட்டணியும் இன்னும் பேச்சுவார்த்தையை துவக்கவில்லை. இந்நிலையில் நான் எங்கள் கூட்டணி நிலைப்பாடு பற்றி பல முறை தெரிவித்துவிட்டேன். இனிமேல் கூட்டணி பற்றி என்னிடம் கேட்பதை விட யார் கூட்டணிக்குத் தலைமையோ அவர்களிடம் கேளுங்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் செயற்குழு பொதுக்குழு கூட்டம் கூட்டி அதுபற்றி அறிவிக்கப்படும்.

தமிழ்நாடு முழுக்க ஏழு மண்டலங்களாக அமைத்து தேர்தல் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம்.அதேநேரம் நிர்வாகிகளும், தொண்டர்களும் தலைவர் அறிவிப்பின்படி செயல்படத் தயாராக இருக்கிறார்கள். செயற்குழுபொதுக்குழுவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும்”என்றவர்,

“ எங்கள் தலைவர் விஜயகாந்த் சொன்னபடி விரைவில் அவர் மக்களையும் தொண்டர்களையும் சந்திக்க தமிழகம் முழுதும் வருவார். இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த் ஈடுபடுவார்”என்று தெரிவித்தார்.

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

வெள்ளி 12 பிப் 2021