மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 பிப் 2021

சசிகலா தென் மாவட்ட பயணம்; ஜெ.கார் ரெடி!

சசிகலா தென் மாவட்ட பயணம்;  ஜெ.கார் ரெடி!

சசிகலா மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் போன்றவர்கள் ஒருபக்கம் அட்டாக் செய்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் பல அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் சசிகலா பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருக்கிறார்கள். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வமும் சசிகலா பற்றி இன்னும் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருக்கிறார்.

இந்த நிலையில் சசிகலா தென் மாவட்டப் பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

“ பிப்ரவரி 8 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, 9 ஆம் தேதி காலை சென்னை வந்த சசிகலா சில மணி நேரம் தி.நகர் இல்லத்தில் ஓய்வெடுத்தார். பிப்ரவரி 9, 10, ஆகிய இரண்டு தேதிகளில் சிலரைச் சந்தித்தவருக்கு, நேற்று பிப்ரவரி 11ஆம் தேதி, உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதற்குத் தேவையான மருந்துகளை எடுத்துக் கொண்டுவரும் சசிகலாவை... தென் மாவட்டத்தைச் சேர்ந்த அவரது சமூகப் புள்ளிகளும் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்கள். அதிமுக, அமமுகவினரும் தொண்டர்களை சந்திக்கும் வண்ணம் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுமாறு சசிகலாவை வற்புறுத்தி வருகிறார்கள்.

விடுதலை உறுதியானதும் தென் மாவட்டங்களில் இரண்டு முக்கியமான சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு சசிகலா ஏற்கனவே தேதிகொடுத்திருந்தார். அதற்காக மதுரை சென்று அங்கிருந்து காரில் பயணம் மேற்கொள்ளத் தயாராகிறார் சசிகலா. அதற்கு முன் தஞ்சை சென்று தனது கணவர் நடராஜனின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவும் திட்டமிட்டுள்ளார் சசிகலா.

இதற்கிடையே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய சுமார் ஒரு கோடி மதிப்புள்ள டொயோட்டோ பரோடா எஸ்.யூ.வி.காரை சசிகலா பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு அந்த கார், நேற்று பிப்ரவரி 11 ஆம் தேதி, மதியம் சென்னையிலிருந்து மதுரைக்குச் சென்றுள்ளது.

சசிகலா உடல்நிலை சரியானதும் ஓரிரு நாட்களில் சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரை செல்பவர் அங்கிருந்து சாலை வழியாக காரில் சென்று மக்களைச் சந்திக்கவும், சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருப்பதாகச் சொல்கிறார்கள்.

-வணங்காமுடி

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வெள்ளி 12 பிப் 2021