மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 பிப் 2021

சட்டமன்றத் தேர்தல்: மாற்றங்கள் என்னென்ன?

சட்டமன்றத் தேர்தல்: மாற்றங்கள் என்னென்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேசியுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக இரண்டு நாட்கள் அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “தற்போதைய தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் எப்போதும்போல் வரும் தேர்தலிலும் அதிக வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கிறோம். புதிய வாக்காளர்கள், பெண்கள், முதியோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தத் தேர்தலில் திட்டமிட்டுள்ளோம்” என்றவர்,

“ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. வாக்குப்பதிவு முடிந்த இரண்டு நாட்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்த அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு தொடர்பாக கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துகள் உள்ளன” என்றார்.

மேலும், “80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தபால் வாக்கு அளிப்பது குறித்து ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு விட்டது. கொரோனா காரணமாக தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும். தேர்தல் பாதுகாப்புப் பணிக்குக் கூடுதலாக துணை ராணுவம் அனுப்பவும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. தேர்தல் பார்வையாளர்களாகப் பிற மாநில அதிகாரிகளை நியமிக்க அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன” என்று கூறியவர்,

“தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு மையங்கள் 68,000இல் இருந்து 93,000 உயர்த்தப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். சிறப்பு பார்வையாளர்களாக இரண்டு பேர் நியமிக்கப்படுவர். சட்டமன்றத் தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என டெல்லி சென்ற பிறகு அறிவிக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

வெள்ளி 12 பிப் 2021