மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 பிப் 2021

விவசாயிகள் போராட்டம்: 583 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!

விவசாயிகள் போராட்டம்: 583 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அவதூறு கருத்துகளைப் பரப்பி வந்த 583 ட்விட்டர் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக அவதூறான கருத்துகளை சிலர் பரப்பி வந்தனர். இந்தியா இன ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாக சித்திரித்தும் கருத்துகள் வெளியிடப்பட்டு இருந்தன. இவற்றை காலிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் உளவுப்படையினர் அனுப்பியிருந்தது தெரியவந்தது.

ட்விட்டர் தளம் மூலமாக இவற்றை அனுப்பி இருந்தனர். எனவே அந்தக் கணக்குகளை முடக்கும்படி மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்துக்குக் கடிதம் அனுப்பியிருந்தது. இந்திய தகவல் தொழில் நுட்பச் சட்டம் 69 ஏ-ன்படி அவதூறான கருத்துகளை இணையதளங்கள் மூலமாக வெளியிடுவது கிரிமினல் குற்றமாகும்.

இவ்வாறு கருத்துகளை வெளியிட்டால் அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்து இருந்தது.

இது சம்பந்தமாக 257 கணக்குகளை முடக்கும்படி ஏற்கனவே மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்துக்குக் கடிதம் அனுப்பியது. அதில் 126 கணக்குகளை ட்விட்டர் முடக்கம் செய்தது. அதன் பிறகு இதேபோல் 1,178 கணக்குகளை முடக்கும்படி மீண்டும் கடிதம் அனுப்பி இருந்தது.

அதில் 583 கணக்குகளை முடக்கம் செய்து இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் கூறியிருக்கிறது. இவற்றில் சில கணக்குகள் நிரந்தரமாக மூடப்படும். மற்ற கணக்குகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

வியாழன் 11 பிப் 2021