அமைச்சர் உறவினர் வீட்டில் ஐ டி ரெய்டு!

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று பிப்ரவரி 11ஆம் தேதி அதிரடி ரெய்டு செய்து வருகின்றனர்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் சட்டத் துறை அமைச்சராக இருந்து வருபவர் சி.வி.சண்முகம். இவரது உறவினரும், அதிமுக பேரவை இணை செயலாளருமான டி.கே.குமார் என்பவர் அரசு துறைகளில் பெரிய ஒப்பந்ததாரர்.
இவரது வீடு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பூந்தோட்டம் பகுதியில் உள்ளது. இவரது தொழிலில் ஜி.எஸ்.டி வரி குறைவாக செலுத்தியிருப்பதை அறிந்த வருமான வரித்துறையில் ஒரு பிரிவான ஜிஎஸ்டி யினர், இன்று பிப்ரவரி 11ஆம் தேதி, காலையிலிருந்து குமார் வீட்டிலும் அலுவலகத்திலும் ரெய்டு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பெரிய பீதியை கிளப்பியிருப்பதாக சொல்கிறார்கள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்.
அண்மையில் அமைச்சர் சண்முகம் கட்சி கொடி தொடர்பான விவகாரத்தில் சசிகலா மீது கடுமையான கருத்துகளைத் தெரிவித்ததோடு, சசிகலா கலவரம் செய்ய திட்டமிடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத் தக்கது