மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 பிப் 2021

கமல்: முதல் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் பொதுக்குழு!

கமல்: முதல் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் பொதுக்குழு!

மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று (பிப்ரவரி 11) சென்னையில் கூடுகிறது.

திராவிட கட்சிகளில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் அறிவாலயத்தில்தான் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதிமுகவின் பொதுக்குழு வானகரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மெகா நிகழ்வாய் நடைபெற்று வருகிறது.

திராவிடக் கட்சிகள் இப்படி திருமண மண்டபங்களில் பொதுக்குழுவை நடத்தி வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியோ நட்சத்திர ஹோட்டல் கலாசாரத்தை தொடர்ந்து பின்பற்றி வருகிறது. ஆனாலும் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு அதிமுக பாணியில் வானகரத்தில் நடைபெறுகிறது.

சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்ட அரங்கத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட சுமார் 800 பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த பொதுக்குழுவில் கட்சி சந்திக்க இருக்கும் முதல் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைமையிலான கூட்டணி பற்றி அறிவிக்கிறார்கள். மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கி நான்காம் ஆண்டு விழாவை மாநாடாக நடத்துவது பற்றியும் இந்த பொதுக்குழுவில் விவாதித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில தினங்களுக்கு முன் மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பொதுக்குழு தீர்மானங்கள் பற்றி ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டுவிட்டதாகவும், அதை அறிவிக்கும் வண்ணமே இந்த பொதுக்குழு நடைபெறுவதாகவும் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

வியாழன் 11 பிப் 2021