மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 பிப் 2021

டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் விளக்கம்!

டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் விளக்கம்!

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடரில் உறுப்பினர் டி.ஆர் பாலு கிடப்பில் உள்ள வழக்குகளை கையாள தேவைக்கு ஏற்ப நீதிமன்றங்களின் என்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு ஏதேனும் திட்டம் வைத்துள்ளாதா ? விரைவில் தீர்ப்பு கிடைக்கவும் ? வழக்குகளின் காலத்தை குறைக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதா ? என நேற்று (பிப்,10) எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.

அதில், நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க தேவையான அளவு நீதிபதிகள் / நீதித்துறை சார்ந்த அதிகாரிகள் / உரிய கட்டமைப்புகளை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. ஆனால், வழக்கின் சிக்கல், உரிய ஆதாரங்களை பெறுதல், விசாரணை தரம், விதிமுறையில் உள்ள இடர்பாடுகளால் வழக்குகள் கிடப்பில் உள்ளதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டதுறையின் பரிந்துரையின் படி வழக்குகளை விரைந்து விசாரிக்க நீதிமன்றங்களின் எண்ணிக்கை மற்றும் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 30இல் இருந்து 33ஆக அதிகரிப்பட்டுள்ளது. மேலும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 906இல் இருந்து 1080 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களை தவிர்த்து உள்ள கீழமை நீதிமன்றங்களின் தேவைகள் உயர்நீதிமன்றங்களால் தீர்மானிக்கப்படுகிறது.

இவ்வாறு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கொடுத்துள்ளது.

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வியாழன் 11 பிப் 2021