மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 பிப் 2021

ஓடிடியில் திரைப்படம் வெளியிடுவது நல்லது கிடையாது: கடம்பூர் ராஜூ

ஓடிடியில் திரைப்படம் வெளியிடுவது நல்லது கிடையாது: கடம்பூர் ராஜூ

ஓடிடியில் திரைப்படம் வெளியிடுவது நல்லது கிடையாது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேற்று (பிப்,10) கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

125 இடங்களில் அதிமுக வெற்றி பெறும் என்று கருத்துகணிப்பு வெளியாகி உள்ளது. நாட்கள் செல்ல செல்ல அதிகரிக்கும் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்.

" திரையரங்குகளில் படம் ஓடும் போது ஓடிடியில் திரைப்படத்தினை வெளியிட மாட்டோம் என்று கடிதம் கொடுத்தால் தான் திரைப்படங்களை வெளியிடுவோம் என்று கூறும் திரையரங்கு உரிமையாளர்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.

கொரோனா ஊரடங்கு காலத்தில் சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டன. இதனை தற்காலிக ஏற்பாடாக வைத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தேன்.

திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளனர். 3 பேரும் இப்பிரச்சினை தொடர்பாக அமர்ந்து பேச வேண்டும்.

நகர்புறங்களில் உள்ள மக்களுக்கு ஓடிடியில் பார்க்கும் வசதி இருக்கும். கிராமப்புறத்தில் இருக்கும் மக்களுக்கு அந்த வசதி கிடையாது. மேலும், ஓடிடியில் திரைப்படம் வெளியிடுவது நல்லது கிடையாது. திரையரங்குகளில் ஓடிய பின்னர் ஓடிடியில் வெளியிடலாம்.

முதல் ரீலிஸ் திரையரங்குகளிலும், 2வது ரீலிஸ் ஓடிடியிலும் வெளியிடலாம். ஒரு காலக்கெடு நிர்ணயம் செய்து ஓடிடியில் வெளியிட வேண்டும்" என்று தெரிவித்தார்.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 11 பிப் 2021