மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 பிப் 2021

எடப்பாடியைச் சந்திக்கிறாரா சசிகலா?

எடப்பாடியைச் சந்திக்கிறாரா சசிகலா?

பிப்ரவரி 9ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சென்னை வந்த சசிகலா, தற்போது தி.நகர் இல்லத்தில் தங்கியிருக்கிறார். அவரை அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் பலரும் தொடர்புகொண்டுவருவதால் சசிகலாவின் வீட்டைச் சுற்றி உளவுத்துறையின் கண்காணிப்பு வளையம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

சிறையில் இருந்து வெளியே வந்து தமிழகம் வந்த பிறகு வெளியிட்ட அறிக்கையில், ‘ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளான அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்' என்று சசிகலா குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்காக முதல்வரை அவரது சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டில் சசிகலா சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. நேற்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு எடப்பாடி பழனிசாமி தனது சேலம் வீட்டுக்குச் சென்றிருக்கும் நேரத்தில் இந்தத் தகவல் வந்திருக்கிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் பெயர் குறிப்பிட்டு தினகரனையும், சசிகலாவையும் கடுமையாக தாக்கிப் பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. மேலும் ஜனவரி 19ஆம் தேதி டெல்லியிலேயே, ‘சசிகலா அதிமுகவில் சேர 100 சதவிகிதம் வாய்ப்பில்லை’ என்று கூறினார். மேலும் சசிகலாவின் கணவர் நடராஜன் காலமானபோது எடப்பாடி எட்டிக்கூட பார்க்கவில்லை. இப்படி அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் எடப்பாடியை சசிகலா நேரடியாகச் சந்தித்து துக்கம் விசாரிக்க வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விகள் அதிமுக அமமுக தொண்டர்களிடையே பெரும் கேள்வியாக எழுந்திருக்கின்றன.

அவ்வாறு இருவரும் சந்திக்க நேர்ந்தால், அது அதிமுகவில் தற்போது நிலவும் பெரும் பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

இதுபற்றி சசிகலாவுக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தபோது, “எடப்பாடியைச் சென்று சந்திக்கும் திட்டமே சசிகலாவிடம் இல்லை” என்று தெரிவிக்கிறார்கள்.

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 11 பிப் 2021