மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 பிப் 2021

தள்ளிப்போகிறதா திமுக மாநாட்டுத் தேதி?

தள்ளிப்போகிறதா திமுக மாநாட்டுத் தேதி?

சட்டமன்றத் தேர்தலை ஒட்டிய திமுகவின் மாநாடு திருச்சிக்கும் பெரம்பலூருக்கும் இடையிலான சிறுகனூரில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மூத்த திமுக தலைவரும், திமுகவின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு ஒவ்வொரு நாளும் சென்று பார்வையிட்டு வருகிறார். மாநாட்டுப் பணிகளை ஐபேக் டீமும் கவனித்து ஒவ்வொரு நாளும் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் அனுப்பி வருகிறது.

முதலில் பிப்ரவரி 21 என்று திட்டமிடப்பட்ட மாநாட்டின் தேதி, பிறகு 28 என மாற்றப்பட்டது. தற்போதைய தகவல்களின்படி மாநாடு மார்ச் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

முதலில் 300 ஏக்கரில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடு, அதன்பின் மேலும் 100 ஏக்கர் என விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநாட்டுப் பணிகள் குறிப்பிட்ட தேதிக்குள் முடிவடைய வாய்ப்பில்லை என்று ஐபேக் கொடுத்த ரிப்போர்ட்டால் மாநாட்டுப் பணிகள் தள்ளிப் போகிறது என்று ஒரு தகவல் வருகிறது.

இன்னொரு பக்கம், “இந்த மாநாட்டில் கூட்டணிக் கட்சிகளை அழைப்பதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. கூட்டணிக் கட்சியினரை அழைப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டிருந்தாலும், மாநாடு நடக்கும்போது திமுக கூட்டணி முடிவாகியிருக்க வேண்டும் என்று கருதுகிறது திமுக தலைமை. தற்போது வரை கூட்டணிக் கட்சிகளில் யாருடனும் திமுக தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவில்லை.

காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் சீட்டுகளில் தொடங்கி, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் என கூட்டணிக் கட்சிகளுக்கு மிகக் குறைவான இடங்களையே திமுக ஒதுக்க முன் வருவதால் ஆரம்பக் கட்டத்திலேயே இருக்கின்றன. இந்த நிலையில் கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்துவிட்டு மாநாட்டை நடத்தலாம் என்ற முடிவில் தலைமை இருப்பதால் மாநாடு தேதி தள்ளிப்போகிறது. அதேநேரம் தேர்தல் தேதி அறிவிப்பைப் பொறுத்து தேதி விரைவில் முடிவு செய்யப்பட்டுவிடும்” என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வியாழன் 11 பிப் 2021