மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 பிப் 2021

ஊழல் ஆட்சி: நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் கேள்வி!

ஊழல் ஆட்சி: நாடாளுமன்றத்தில்  தயாநிதி மாறன் கேள்வி!

'தமிழகத்தில் ஊழலில் திளைக்கும் தனது கூட்டணிக் கட்சிமீது எந்த நடவடிக்கையும் மத்திய அரசு ஏன் எடுப்பதில்லை?' என திமுக எம்.பி தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் நேற்று (பிப்ரவரி 10) கேள்வி எழுப்பினார்.

"பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது, 130 கோடி ரூபாய் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. ஆனால், அந்த வழக்கை சிபிஐ முடித்துக் கொண்டது ஏன்?

தமிழக வரலாற்றிலேயே தலைமைச்செயலகத்தில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது இந்த ஆட்சியில்தான். மாநில முதலமைச்சருக்கு எதிராக ஊழல் வழக்குகள், சுகாதாரத்துறை அமைச்சருக்கு எதிராக ஊழல் வழக்குகள் என வழக்குகள் நிற்கின்றன. கொரோனா காலத்தில் மாஸ்க் வாங்கியதில் ஊழல் நடத்திய ஒரே அரசு தற்போதைய தமிழக அரசுதான். ஏன் மத்திய பாஜக அரசு இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், "தமிழகத்தில் கிடப்பில் உள்ள ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டதோடு சரி... எந்த முன்னேற்றமும் இல்லை. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 4ஜி சேவை வழங்கிய மத்திய அரசுக்கு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு 4ஜி வழங்க மறுப்பது ஏன்?" எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், "மக்களின் நம்பிக்கையைப் பெற்ற காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும்" எனவும் தயாநிதி மாறன் வலியுறுத்தினார்.

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

வியாழன் 11 பிப் 2021