மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 பிப் 2021

தெற்காசிய சாக்ரடீஸ் : புதிய உத்தரவு!

தெற்காசிய சாக்ரடீஸ் : புதிய உத்தரவு!

பெரியாருக்கு, யுனெஸ்கோ அமைப்பால் "தெற்காசிய சாக்ரடீஸ்" என்ற பட்டம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ள, தவறான தகவல்களை நீக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி பாட நூல் குழு பரிசீலனை செய்து 12 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்ககோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த சர்ச்சை தொடர்பாக மதுரையை சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி பாட புத்தகத்தில் "தெற்காசியாவின் சாக்ரடீஸ்" என்று பெரியாருக்கு யுனெஸ்கோ பட்டம் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. அவ்வாறு எந்த பட்டத்தையும் யுனெஸ்கோ வழங்காத நிலையில் தமிழக அரசின் பள்ளி, கல்லூரி பாட புத்தகங்களில் இது போல கூறப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகள் பட்டியலில் நமது தேசம் இல்லை என்பது அனைவரும் அறிந்தது. மேலும் யுனெஸ்கோவின் முத்திரையை போலியாக பயன்படுத்தி, வேண்டுமென்றே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டம் 1970ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்தத் தகவலானது திட்டமிட்டு வேண்டுமென்றே அரசியல் ஆதாயத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளது . மாணவர்கள் தவறான பொய்யான தெளிவற்ற விசயங்களை கற்கும் போது தவறான புரிதல் ஏற்படும். ஆகையால் ஒன்பதாம் வகுப்பு சமச்சீர் பாடத்திட்டத்திலும் கல்லூரி பாடத் திட்டத்திலும் பெரியாருக்கு, யுனெஸ்கோ அமைப்பால் "தெற்காசிய சாக்ரடீஸ்" என்ற பட்டம் வழங்கப்பட்டதாக உள்ள தவறான தகவல்களை நீக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

புதன் 10 பிப் 2021