மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 பிப் 2021

சசிகலாவுடன் தீபா -தீபக் ஆலோசனை: பேசியது என்ன?

சசிகலாவுடன் தீபா -தீபக் ஆலோசனை: பேசியது என்ன?

பிப்ரவரி 9ஆம் தேதி காலை சென்னை தி நகரில் உள்ள தனது வீட்டிற்கு சசிகலா வந்து சேர்ந்ததும் சில மணி நேரம் ஓய்வு எடுத்தார். அதன்பிறகு அவரை பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சந்தித்து பேசினார்கள்.

அவர்களில் ஜெயலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா தீபக் ஆகியோரும் அடங்குவர்.

இருவரும் சசிகலாவுடன் சுமார் 3 மணி நேரம் பேசி இருக்கிறார்கள். சசிகலா சிறை சென்றது முதல் போயஸ் கார்டன் இல்லத்தில் என்ன நடந்தது... தமிழக அரசு அந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு எப்படி எல்லாம் தங்களை அணுகியது என்பது பற்றி சசிகலாவிடம் விளக்கியிருக்கிறார்கள் தீபாவும் தீபக்கும்.

நீதிமன்ற அறிவுறுத்தல்களுக்கு பிறகும் தங்களுக்கு தமிழக அரசு நியாயம் செய்யவில்லை என்று சசிகலாவிடம் புலம்பியிருக்கிறார்கள் தீபாவும் தீபக்கும்.

இவற்றைக் கேட்டுக் கொண்ட சசிகலா அவர்களுக்கு சில முக்கியமான யோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.

அதன்படி நாளை பிப்ரவரி 11 ஆம் தேதி போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தின் வாசலில் தீபாவும் தீபக்கும் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும் தேர்தலுக்குள் அதிமுக அமமுக இணைப்பு நடவடிக்கை பூர்த்தி ஆகவில்லை எனில் அமமுகவுக்காக தீபா, தீபக் தேர்தல் பிரச்சாரம் செய்யவும் இந்த சந்திப்பில் பேசப்பட்டிருக்கிறது என்கிறார்கள் சசிகலா வட்டாரத்தில்.

வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

புதன் 10 பிப் 2021