மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 பிப் 2021

கவர்னருக்கு எதிராக குடியரசு தலைவரிடம் காட்டமான புகார்!

கவர்னருக்கு எதிராக  குடியரசு தலைவரிடம் காட்டமான புகார்!

துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் தொடர் போராட்டம் புதுவையில் நடந்து வரும் நிலையில், நேரில் வலியுறுத்த நேற்று விமானம் மூலம் டெல்லி சென்ற புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று (பிப்,10) குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை டெல்லியில் சந்தித்தார்.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தனக்குத்தான் அதிகாரம் என கிரண்பேடி அரசின் அன்றாட நிகழ்வுகளில் தலையிட்டு வருவதுடன், மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார் என்று முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஆளுநர் கிரண்பேடி மீது பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் குடியரசுத்தலைவரை சந்தித்து புகார் செய்யப் போவதாக நாராயணசாமி கூறினார். இதற்காக கடந்த மாதம் டெல்லி சென்றார். ஆனால் குடியரசு தினவிழா பணிகளில் குடியரசுத்தலைவர் ஈடுபட்டிருந்ததால் சந்திக்க முடியாததால், நாராயணசாமி புதுவைக்கு திரும்பினர். இந்நிலையில் இன்று (பிப்,10) காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர். அப்போது புதுவை மக்களிடம் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பெறப்பட்ட கையெழுத்து இயக்கபிரதிகளை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைத்து, அரசுக்கு கிரண்பேடி தரும் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைத்தனர்.

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

புதன் 10 பிப் 2021