மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 பிப் 2021

ஸ்டாலின் தூதுவரை சந்திக்க மறுத்த ராகுல்

ஸ்டாலின் தூதுவரை சந்திக்க மறுத்த ராகுல்

திமுகவுக்கும் காங்கிரஸுக்குமான கூட்டணி இருக்குமா என்ற கேள்வி முதலில் எழுந்த நிலையில், அடுத்ததாக முன்பு போட்டியிட்ட இடங்களை விட மிகக் குறைவான இடங்களையே காங்கிரஸுக்கு தர திமுக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இதே நேரம் தமிழக காங்கிரஸ் தலைவரான கே.எஸ். அழகிரி, , ‘கூட்டணி விவகாரம் தொடர்பாக திமுக தன்னிடம் எதுவும் கலந்துபேசாமல் நேரடியாக டெல்லியுடனே தகவல் பரிமாற்றம் செய்வதாக வருத்தத்தில் இருக்கிறார்.

இந்த வருத்தத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசன் கடந்த வாரம் திடீரென டெல்லி சென்றார். திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 15 இடங்கள்தான் என்று ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் மூலமாக காங்கிரஸ் டெல்லி தலைமையிடம் திமுக தெரிவித்துவிட்டது. இந்தத் தகவலை அடுத்து காங்கிரஸ் தலைமை கடுமையான அதிருப்தி அடைந்த நிலையில், வேண்டுமென்றால் 20 வரை உயர்த்தலாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சற்று இறங்கி வந்திருந்தார் எனவும் தகவல்கள் திமுக காங்கிரஸ் வட்டாரங்களில் விவாதிக்கப்படுகின்றன.

இந்த நிலையில்தான் சபரீசன் டெல்லி சென்று ராகுலை சந்தித்து காங்கிரசுக்கான இடங்கள் பற்றி திமுக தலைவரின் நிலைப்பாட்டை விளக்க இருக்கிறார் என்று தகவல்கள் வந்தன. சபரீசன் வந்திருக்கும் செய்தி ராகுலுக்கு சொல்லப்பட, என்ன விஷயமாக வந்திருக்கிறார் என்று கேட்டிருக்கிறார் ராகுல் காந்தி. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கான இடங்கள் பற்றி பேச வந்திருக்கிறார் என்று ராகுல் காந்திக்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் ராகுல் காந்தி பிடி கொடுக்காமல் சபரீசனை சந்திக்க மறுத்துவிட்டதாக சொல்கிறார்கள் ராகுல் ஆதரவாளர்கள்.

சபரீசன் வட்டாரத்திலோ, “சபரீசன் இந்த விஷயத்துக்காக டெல்லி செல்லவில்லை. ராகுலை சந்திப்பதற்காக அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை” என்று முற்றிலுமாக மறுக்கிறார்கள்.

-ராஜ்

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

புதன் 10 பிப் 2021