மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 பிப் 2021

சசிகலா சதிகாரி: எடப்பாடி ஆவேசம்!

சசிகலா சதிகாரி: எடப்பாடி ஆவேசம்!

பெங்களூருவில் இருந்து 24 மணி நேர வரவேற்பு பயணத்துக்குப் பிறகு சசிகலா நேற்று (பிப்ரவரி 9) காலை சென்னை தி.நகரில் இருக்கும் தனது இல்லத்துக்கு வந்தடைந்தார்.

பிப்ரவரி 8ஆம் தேதி வேலூரில் பிரச்சாரத்துக்குத் திட்டமிட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் வருகையால் தனது பிரச்சாரத்தை ரத்து செய்தார். அந்தப் பிரச்சாரத்தை நேற்று (பிப்ரவரி 9) மேற்கொண்டார். அப்போது சசிகலாவுக்கும் தினகரனுக்கும் தனது பிரச்சாரத்தில் ஆவேசமாகப் பதிலளித்தார் எடப்பாடி.

“அதிமுகவைப் பின்னடையச் செய்வதற்கு சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். டிடிவி தினகரன் அதில் ஒருவர். பத்தாண்டுக் காலம் கட்சியிலேயே கிடையாது. அம்மா அடிப்படை உறுப்பினர்லேருந்து நீக்கி வெச்சிருந்தாங்க. அம்மா மறைவுக்குப் பிறகு அவர் கட்சியில சேர்ந்துக்கிட்டதா அவரே அறிவிச்சுக்கிட்டாரு. அவர் அதிமுகவைக் கைப்பற்றுவதற்கு எவ்வளவு முயற்சி செய்தார் தெரியுங்களா?

எங்க கட்சி எம்.எல்.ஏ.க்கள் 18 பேரைப் பிடிச்சிக்கிட்டுப் போயிட்டாரு. அந்த 18 பேரையும் நடுரோட்ல விட்டுட்டுப் போயிட்டாரு. அவரை நம்பிப் போனவங்கள்லாம் நடுரோட்லதான் நிக்கோணும்.

இப்படி ஏதாவது செஞ்சி அதிமுகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி திமுகவுக்கு உதவுறதுக்காக சில பேரு சதித்திட்டம் தீட்டிக்கிட்டிருக்காங்க. அதையும் எங்க அரசு, எங்க கட்சி முறியடிக்கும்.

திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்று எம்ஜிஆர் தன் இறுதி மூச்சு வரை போராடினார். அதே வழியில் ஜெயலலிதாவும் நின்றார். சில சதிகாரிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு சதி வலையை இன்றைக்குப் பின்னிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வலையை சின்னாபின்னமாக தூள் தூளாக தகர்த்தெறிந்து, அம்மா அரசு தொடர நாம் பாடுபடுவோம். அதிமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. ஏனென்றால், அந்த இரு பெரும் தலைவர்கள் தனக்காக வாழவில்லை. நாட்டு மக்களுக்காக வாழ்ந்தவர்கள்" என்று பேசினார் எடப்பாடி பழனிசாமி.

சசிகலாவை சதிகாரி என்று குறிப்பிட்டு, முதல்வர் எடப்பாடி பேசியிருப்பது அதிமுக, அமமுக வட்டாரங்களில் அதிர்வோடு பார்க்கப்படுகிறது.

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

புதன் 10 பிப் 2021