மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 பிப் 2021

பெங்களூரு டு தி.நகர்: விடிய விடிய சசிகலா நடத்திய அரசியல் பயணம்!

பெங்களூரு டு தி.நகர்:  விடிய விடிய சசிகலா நடத்திய அரசியல் பயணம்!

அதிமுகவின் பொதுச் செயலாளர் நானே என உரிமை கொண்டாடும் சசிகலா, நேற்று (பிப்ரவரி 8) காலை பெங்களூருவில் தொடங்கிய சென்னையை நோக்கிய பயணம், இன்று (பிப்ரவரி 9) காலை 6.25 மணிக்கு தி.நகரில் நிறைவடைந்தது.

வழியெங்கும் வரவேற்புகள், அரசின் நேரடி மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தாண்டி நள்ளிரவு முழுவதும் பல்வேறு பாயின்ட்டுகளை கடந்து அதிகாலை 3.30 மணியளவில் சென்னையின் எல்லையான கிண்டியை அடைந்தார் சசிகலா.

அதன்பின் ராமாவரத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு டிடிவி தினகரனோடு சென்ற சசிகலா, அங்கே எம்.ஜி.ஆர். சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சில நிமிடங்கள் அங்கே உட்கார்ந்து தினகரனுடன் பேசிக்கொண்டிருந்த சசிகலா, அங்கிருந்து புறப்பட்டு சென்னை தி. நகரில் இருக்கும் தனது இல்லத்துக்கு வருவதற்கு இரண்டு மணி நேரம் ஆனது.

சைதாப்பேட்டையில் அதிரடியான வரவேற்புக்குப் பின் மெல்ல மெல்ல தி.நகரில் இருக்கும் தனது இல்லத்துக்கு சசிகலா வந்தபோது இன்று காலை 6.25 . மேளதாளம், நாதஸ்வரங்கள் முழங்க, பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

வீட்டுக்குள் நுழைந்த சசிகலாவுக்குத் திருஷ்டி சுற்றப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. டிடிவி தினகரனும் அவருடன் வீடு வரை வந்தார்.

விடிய விடிய பயணம் மேற்கொண்டு வந்ததால் சசிகலா இன்று முழுமையான ஓய்வெடுப்பார் என்றும் இன்றோ, நாளையோ பத்திரிகையாளர்களை முறைப்படி சந்திப்பார் என்றும் சொல்கிறார்கள் அவரது வட்டாரங்களில்.

- hello

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

செவ்வாய் 9 பிப் 2021