மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 பிப் 2021

சசிகலா வரவேற்பு: காவல்துறை அனுமதி!

சசிகலா வரவேற்பு: காவல்துறை அனுமதி!

நாளை பிப்ரவரி 8ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பும் சசிகலாவுக்கு கர்நாடக தமிழக எல்லை முதல் சென்னை வரை பிரமாண்டமான அளவில் வரவேற்பு அளிக்க தினகரன் தலைமையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சசிகலாவுக்கு எதிராக தொடர்ந்து இருமுறை டிஜிபியிடம் தமிழக அமைச்சர்கள் புகார் தெரிவித்த நிலையில்... சசிகலாவுக்கு வரவேற்பு ஏற்பாடுகளுக்கு காவல்துறை அனுமதி அளித்து இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 6ஆம் தேதி அவர் வெளியிட்டுள்ள செய்தியில்....

"சென்னை உள்ளிட்ட இடங்களில் தியாகத் தலைவி சின்னம்மாவுக்கு நாம் அளிக்கும் வரவேற்பு ஏற்பாடுகளுக்கு காவல்துறை நமக்கு அனுமதி அளித்திருக்கிறது. காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து அவர்கள் தமிழகம் வருகை நாளை ஒட்டுமொத்த தமிழக மக்களும் மகிழ்ந்து கொண்டாடுகிற நாளாக மாற்றிடுவோம். வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எதிரியான தீயசக்தி கூட்டத்தை தலையெடுக்காமல் செய்கிற பணியை முழு உற்சாகத்தோடு முன் எடுத்திடுவோம்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சசிகலா வருகையைக் காரணம் காட்டி தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாக டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் மீது சட்ட அமைச்சர் சண்முகமே குற்றம்சாட்டிய நிலையில் சென்னையில் சசிகலாவுக்கு வரவேற்பளிக்க காவல்துறை அனுமதி அளித்திருப்பது அரசியல் அரங்கில் ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

ஞாயிறு 7 பிப் 2021