மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 பிப் 2021

அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலினோடு பேசிய அதிமுக புள்ளிகள்!

அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலினோடு பேசிய அதிமுக புள்ளிகள்!

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க அதிமுகவினரே தனக்கு தூதுவிட்டார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்வு இன்று (பிப்ரவரி 6) கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் – ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மக்களிடம் புகார் மனுக்களைப் பெற்றுக் கொண்டு பேசிய ஸ்டாலின்,

“ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி தி.மு.க. ஆட்சி அமைத்துவிட வேண்டும் என்று பலரும் சொன்னார்கள். அ.தி.மு.க.வில் இருந்தே பலரும் எங்களுக்குத் தூது விட்டார்கள்.

அப்படி யார் யாரெல்லாம் தூதுவிட்டார்கள் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. அவர்களது மனச்சாட்சிக்கு இது தெரியும். அப்படி ஆட்சி அமைத்திருந்தால் அது கழக அரசாக அமைந்திருக்காது. கலைஞர் அரசாக அமைந்திருக்காது. அப்படி முதலமைச்சராக விரும்பாதவன் நான்.

கோடிக்கணக்கான மக்களால் வாக்களிக்கப்பட்டு கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். அத்தகைய ஆட்சி தான் விரைவில் அமைய இருக்கிறது.

234 சட்டமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றி முழுமையான வெற்றியை கழகம் பெற இருக்கும் தேர்தல் தான் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல். அப்படி அமையும் ஆட்சி தான் முழுமையான மக்கள் ஆட்சியாக அமையும். இன்று நீங்கள் பார்ப்பது முழுமையான ஆட்சி அல்ல. அரை அ.தி.மு.க. - அரை பா.ஜ.க. ஆட்சி”என்று குறிப்பிட்டார் ஸ்டாலின்.

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

சனி 6 பிப் 2021