மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 பிப் 2021

எடப்பாடி வீட்டுக்குச் செல்லும் ராமதாஸ்

எடப்பாடி வீட்டுக்குச் செல்லும் ராமதாஸ்

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்வது குறித்து இரு கட்சிகள் இடையேயும் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில்.... இவற்றின் அடுத்த கட்டமாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று பிப்ரவரி 6 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு செல்கிறார்.

அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற வேண்டுமானால் எம் பி சி 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு தனி உள் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை பாமக வற்புறுத்தி வருகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆறு கட்டப் போராட்டங்களை இதுவரை பாமக நடத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் டாக்டர் ராமதாசுடன் பேசுவதற்காக அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், சி.வி சண்முகம், வேலுமணி, தங்கமணி ஆகியோர் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று வந்தனர்.

இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதி பாமகவின் நிர்வாகக்குழு கூட்டத்தில் அரசியல் முடிவு எடுக்கப்படும் என ராமதாஸ் எச்சரித்த நிலையில்... பிப்ரவரி 3ஆம் தேதி இது குறித்து பேசுவதற்காக பா ம க பிரதிநிதிகளை அமைச்சர்கள் அழைத்தனர்.

அதன்படி அன்று சென்னையில் உள்ள அமைச்சர் தங்கமணியின் வீட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிமுக சார்பில் அமைச்சர்கள் அன்பழகன், சண்முகம், தங்கமணி, வேலுமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்ள... பாமக சார்பில் தலைவர் ஜி.கே. மணி, ஏ. கே. மூர்த்தி வழக்கறிஞர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது வன்னியர்கள் உள் ஒதுக்கீடு தொடர்பாக தேர்தலுக்குள் முடிவெடுத்து அறிவிப்பது பற்றி அதிமுக யோசித்ததாக கூறப்பட்டது

.

இந்தப் பேச்சுவார்த்தை விவரங்கள் பற்றி பாமக தரப்பில் சென்னையில் இருந்த ராமதாசுக்கும்... அதிமுக தரப்பில் முதல்வர் எடப்பாடி க்கும் துணை முதல்வர் ஓபிஎஸ்சுக்கும் தெரிவிக்கப்பட்டது..

இதன் அடுத்த கட்டமாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க தயார் ஆகிறார். இந்த சந்திப்பு முதல்வரின் வீட்டில் நடக்க இருப்பதாக இரு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

சனி 6 பிப் 2021