மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 பிப் 2021

துரைக்கு சீட்டு ஒதுக்கியாச்சு: துரைமுருகன்

துரைக்கு சீட்டு ஒதுக்கியாச்சு: துரைமுருகன்

மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ கட்சியில் முன்னிலைப் படுத்தப் படவேண்டும் என்ற கோரிக்கை கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பலராலும் வலியுறுத்தப்பட்டது.

இதுபற்றி மின்னம்பலத்தில் பிப்ரவரி 4-ஆம் தேதி "வைகோ மகன் வரவேண்டும் தாயகத்தில் மாசெக்கள் நிறைவேற்றிய தீர்மானம்" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த செய்தி அரசியல் வட்டாரத்திலும் மதிமுக வட்டாரத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நம்மிடம் பேசிய மதிமுகவின் வேலூர் மாவட்ட நிர்வாகிகள்...

"நீங்கள் குறிப்பிட்டிருந்தவாறு எங்கள் தலைவர் வைகோவின் மகன் துரை வைகோவை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அனைவரும் வரவேற்று பேசினார்கள்.

வரும் சட்டமன்ற தேர்தலில் துரை போட்டியிட வேண்டும் என்று அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்தில் அதிபன் உள்ளிட்டோர் வலியுறுத்தினார்கள்.

ஆனால் வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் சுப்பிரமணி பேசும்போது துரை வைகோ வரும் சட்டமன்ற தேர்தலில் நிற்பது உறுதி என்ற தகவலை மூன்று முக்கிய சாட்சிகள் மூலமாக நிறுவினார்.

அந்த கூட்டத்தில் வேலூர் சுப்பிரமணி பேசும்போது..."தலைவரே.. நீங்க என்ன உங்க பையன வரவிடாமல் தடுக்குறீங்க? எங்கள் மாவட்டத்துக்காரரும் திமுகவின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் என்னிடம்.... 'என்னையா... உங்க தலைவர் மகன் துரைக்கு ஒரு சீட்டு ஒதுக்கியாச்சுய்யா...' என்று சொல்கிறார். திமுகவின் மாவட்ட செயலாளரும் உயர்நிலைக் குழு உறுப்பினரும் தலைமைக்கு நெருக்கமானவருமான எ.வ. வேலுவும், 'வைகோ பையன் துரை வரும் சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டியில் போட்டியிடுவார்' என்று என்னிடம் சொன்னார்.

அரக்கோணம் எம்பி யும் திமுகவின் தலைவருக்கு நெருக்கமானவருமான ஜெகத்ரட்சகன் என்னிடம், ' உங்க தலைவர் மகன் வரும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடுவார் என சொல்கிறார்" என்று பேசியிருக்கிறார்.

துரைமுருகன் கூறியது.... எ.வ. வேலு கூறியது.... ஜெகத்ரட்சகன் கூறியது எல்லாம் தவறாக இருக்குமா? அப்படி என்றால் துரைக்கு திமுக தலைமையிடம் பேசி முடித்துவிட்டார்கள் என்றுதான் அர்த்தம்.

எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் அனேகமாக கோவில்பட்டியில் துரை வைகோ போட்டியிடுவார். பெரும் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார்", என்கிறார்கள்.

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

சனி 6 பிப் 2021