மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 பிப் 2021

விவசாய கடன் தள்ளுபடி: எடப்பாடியின் அடுத்த அதிரடி!

விவசாய கடன் தள்ளுபடி: எடப்பாடியின் அடுத்த அதிரடி!

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் தொகை தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

இன்று பிப்ரவரி 5ஆம் தேதி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிக்கை தாக்கல் செய்தார் முதல்வர்.

அதில். ,"விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 12410 கோடி ரூபாய் மதிப்புள்ள கடன் தொகை ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் 16 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்" என்று முதல்வர் அறிவித்தார்.

அறிவிப்பைக் கேட்டதும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.

கடந்த ஜனவரி 18ஆம் தேதி டெல்லி பயணம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி 19ஆம் தேதி பிரதமரை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

எடப்பாடி டெல்லிக்கு சென்ற 18 ஆம் தேதி... மின்னம்பலத்தில் விவசாயக் கடன்கள் ரத்து? முதல்வரின் டெல்லி பயண மெகா திட்டம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதன்படியே இப்போது விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

வெள்ளி 5 பிப் 2021