மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 பிப் 2021

இனி உதயசூரியன் சின்னத்தில் நிற்க கூடாது: கணேசமூர்த்தி

இனி உதயசூரியன் சின்னத்தில் நிற்க கூடாது: கணேசமூர்த்தி

திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களை வரும் சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக தலைமை வற்புறுத்தி வருகிறது.

இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ... "நாங்கள் தனி சின்னத்தில் போட்டியிடுவோம்" என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்... "எங்கள் தனித்துவத்தை இழக்காமல் கூட்டணியின் வெற்றிக்கும் பாதிப்பு ஏற்படாமல் ஒரு முடிவு எடுப்போம்" என்று கூறி வருகிறார்.

இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு மக்களவை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற கணேசமூர்த்தி பிப்ரவரி 3ஆம் தேதி நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது அவர் மதிமுகவின் பொருளாளராக இருந்தார். தேர்தலில் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டியிருந்ததால்... மதிமுகவின் பொருளாளர் பதவியில் இருந்து விலகினார். இப்போது வரை மதிமுகவின் பொருளாளர் பதவி காலியாகவே இருக்கிறது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மேடையில் வைகோவுக்கு அருகில் கணேசமூர்த்தி அமர்ந்திருந்தார். கட்சியின் மரபுப்படி பொதுச் செயலாளருக்கு முன்பு கணேசமூர்த்தி அக் கூட்டத்தில் பேசினார்.

"நான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் நிற்காவிட்டாலும் வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் அப்போதைய சூழ்நிலையில் நான் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டியது கட்டாயமாகிற்று. இனிமேலும் நாம் வேறு கட்சிகளின் சின்னத்தில் நிற்க கூடாது. நமது சின்னத்திலேயே நிற்க வேண்டும். உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்று இருந்தாலும் நான் மதிமுக தான்" என்று பேசியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து உரையாற்றிய பொதுச்செயலாளர் வைகோ...."கணேசமூர்த்தி இன்று சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அவர் சிறப்பு விருந்தினராக இருந்தாலும் இனி அவரை மதிமுகவின் அனைத்து கூட்டங்களுக்கும் அழைக்க வேண்டும். திமுக கூட்டணியில் நாம் உறுதியாக தொடர்கிறோம். ஸ்டாலினும் நானும் மட்டுமே தொகுதிகள் பற்றி பேசி இருக்கிறோம். அதனால் தொகுதிகளின் எண்ணிக்கை பற்றி வரும் தகவல்களை நம்பி கவலைப்படாதீர்கள். இரட்டை இலக்கத்தில் கௌரவமான முறையில் நாம் பெறுவோம்" என்று தெரிவித்தார்.

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

வெள்ளி 5 பிப் 2021