மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 பிப் 2021

சசிகலா வருகை:எடப்பாடி பிரச்சாரம் ரத்து!

சசிகலா  வருகை:எடப்பாடி பிரச்சாரம் ரத்து!

சசிகலா பிப்ரவரி 8ஆம் தேதி, சென்னை வரும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசாரப் பயணத்திட்டம் நேற்று பகலில் அறிவிக்கப்பட்டு, திடீரென இரவில் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகம் வரும் சசிகலாவுக்குச் சிறப்பான வரவேற்புகள் கொடுப்பதற்கு அமமுகவில், நேற்று (பிப்ரவரி 4) மாலை, தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களும் ஒன்றிய நகர, பேரூராட்சி, மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தை அவசரமாக நடத்தினார்கள்.

வரவேற்புக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமையிடம் இருந்து வந்த அறிவுரைகளை மாவட்டச் செயலாளர்கள் கட்சி நிர்வாகிகளிடம் எடுத்துரைத்தார்கள்.

இந்த நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி 5-வது கட்டத் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணமாகப் பிப்ரவரி 7, 8 ஆகிய இரு தேதிகளில் திருவள்ளூர், திருப்பத்தூர் வேலூர் ஆகிய மாவட்டங்களில் செல்கிறார் என்று வழித் தடம், பேசும் இடம், நிகழ்வுகள் ஆகியவற்றை நேற்று (பிப்ரவரி 4) பகலில் அதிமுக தலைமை கழகம் வெளியிட்டிருந்தது. ஆனால் திடீரென்று நேற்று இரவே முதல்வர் தேர்தல் பிரச்சாரப் பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

8 ஆம் தேதி சசிகலா அதே வழியாக சென்னை வரும் நிலையில், அவரை வரவேற்க பெருமளவிலான அமமுக தொண்டர்கள் குவியும் வாய்ப்புள்ளதால், முதல்வர் பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதேநாளில் முதல்வர் பிரச்சாரம் செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று உளவுத்துறையின் அறிவுறுத்தலால் ரத்து செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள் ஆளுந்தரப்பு வட்டாரத்தில்.

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

வெள்ளி 5 பிப் 2021