மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 பிப் 2021

சசிகலாவிடம் அதிமுக கொடி - சட்டம் தடுக்காது: ராஜா செந்தூர் பாண்டியன்

சசிகலாவிடம் அதிமுக கொடி - சட்டம்  தடுக்காது:  ராஜா செந்தூர் பாண்டியன்

தனது காரில் சசிகலா அதிமுக கொடி கட்டியதற்கு எதிராக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமையில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் நேற்று (பிப்ரவரி 4) தமிழக டிஜிபியைச் சந்தித்து புகார் கொடுத்திருக்கிறார்கள்.

வெளியே வந்த கே.பி.முனுசாமி, "சசிகலா அதிமுக உறுப்பினரே இல்லை. அவரை ஏன் நீக்கவில்லை என்ற கேள்வி எழவில்லை" என்றார். சட்ட அமைச்சர் சண்முகமோ, "சசிகலா இனி ஐ.நா. சபைக்குத்தான் போகணும்" என்றார்.

இந்த நிலையில் சசிகலாவின் வழக்கறிஞரான ராஜா செந்தூர் பாண்டியன் இந்த நிகழ்ச்சிகள் குறித்து கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.

"அமைச்சர்கள் மக்கள் பணியில் ஈடுபட வேண்டிய நேரத்தில், அதையெல்லாம் கவனிக்காமல் சசிகலா காரில் கொடிகட்டிவிட்டார்கள் என்று தங்கள் ஆளுகைக்குள் இருக்கும் டிஜிபியிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையத்தில் 2017இல் நடந்த வழக்கின் தீர்ப்பு அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மதுசூதனன் தலைமையிலான குழுவுக்குச் செல்கிறது என்று சொல்லியிருக்கிறது. அப்படியென்றால் இன்னொரு குரூப் இருக்கிறது என்று அர்த்தம். இது சட்டத் துறை அமைச்சருக்குத் தெரியாதா?

செப்டம்பர் 2017 பொதுக்குழுவை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு நிலுவையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும்போது அதை மறைத்துவிட்டு டிஜிபியைச் சந்திக்கிறார்கள்.

சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்துவதை சட்ட ரீதியாகத் தடுக்க முடியாது. சசிகலா பொதுச் செயலாளர் இல்லை என்பதை எந்த நீதிமன்றமும் கூறவில்லை.

நான் பார்த்து பழகிய விதத்தில் சொல்கிறேன். சசிகலா மிக தைரியம் வாய்ந்த பெண்மணி. அவருக்கு எதிராக இன்று இவர்கள் செய்யும் நடவடிக்கைகள் எல்லாம் இவர்களுக்கு எதிராகவே முடியும்" என்கிறார்.

-வேந்தன்

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வெள்ளி 5 பிப் 2021