மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 பிப் 2021

தேர்தல் அறிக்கையில் வன்னியர் இட ஒதுக்கீடு: பாமகவிடம் அதிமுக

தேர்தல் அறிக்கையில் வன்னியர் இட ஒதுக்கீடு:  பாமகவிடம் அதிமுக

அதிமுகவுக்கும், பாமகவுக்கும் இடையில் வன்னியர் இட ஒதுக்கீடு உள்ளடக்கிய கூட்டணிப் பேச்சுவார்த்தை நேற்று (பிப்ரவரி 3ஆம் தேதி) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக இரு கட்சியினருக்கும் இடையே முடிவு எட்டப்படவில்லை.

அதிமுக கூட்டணியில் தொடர்வது என்பது வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு அறிவிப்பதில்தான் உள்ளது என்று பாமக சார்பில் தெளிவாக அதிமுகவிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டது. தைலாபுரம் தோட்டத்துக்கு மூன்றாவது முறையாக அமைச்சர்கள் சென்ற பிறகு, நேற்று (பிப்ரவரி 3) சென்னையில் அமைச்சர் தங்கமணியின் வீட்டில் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.

பேச்சுவார்த்தையை தலைமைச் செயலகத்தில் வையுங்கள். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகளை அழையுங்கள் என்று பாமக தரப்பில் வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு, “முதலில் நாம் பேசிக் கொள்வோம். பிறகு அடுத்த கட்டத்துக்கு செல்லலாம்” என்று அதிமுக தரப்பில் பதிலளிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி தங்கமணி இல்லத்தில் பாமக சார்பில் அதன் தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் கே.பாலு, பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நேற்று தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தையில் பாமக தரப்பினர் வன்னியர்களுக்கு 15 அல்லது 16% உள் இட ஒதுக்கீட்டில் உறுதியாக இருந்ததாகத் தெரிகிறது. இதற்கு அதிமுக சார்பில் சட்ட ரீதியாக காரணங்களை சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது.

கடைசியாக, ‘ பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் கூட தேர்தல் அறிவிக்கப்படலாம். இந்த நேரத்தில் அவசரமாக இதை செய்வது சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் சவாலானது. எனவே தேர்தல் அறிக்கையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு என்பதை அறிவிக்கிறோம். அடுத்து ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவோம்' என்று அதிமுக தரப்பில் பாமகவிடம் சொல்லப்பட்டிருக்கிறது. இதையடுத்து இப்போது முடிவெடுக்க வேண்டிய இடத்தில் பாமக இருக்கிறது.

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

வியாழன் 4 பிப் 2021