மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 பிப் 2021

முஸ்லிம் லீக் எத்தனை சீட்? காதர் மொய்தீனிடம் துரைமுருகன்

முஸ்லிம் லீக் எத்தனை சீட்?  காதர் மொய்தீனிடம் துரைமுருகன்

திமுக கூட்டணியில் ஒவ்வொரு கட்சியோடும் கூட்டணி விவகாரம் தொடர்பாக திமுகவின் ஒவ்வொரு தலைவரையும் பேசச் சொல்லி ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியோடு எ.வ. வேலு பேசிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் முஸ்லிம் கட்சிகளோடு பேச துரைமுருகனிடம் கூறியுள்ளார் ஸ்டாலின். அதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீம், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளோடு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசி வருகிறார். இந்த பேச்சுவார்த்தைகள் அறிவாலயத்தில் நடைபெறவில்லை. அவரவர்கள் தனித்தனியாக பேசி அதன் பிறகு முடிவெடுத்த பிறகு அறிவாலயத்தில் வைத்து அறிவிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரான பேராசிரியர் காதர் மொய்தீன் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

கடந்த ஜனவரி 6 ஆம் தேதி திமுகவின் சிறுபான்மை பிரிவு நடத்திய இதயங்களை இணைப்போம் நிகழ்ச்ச்சியில் பேசிய காதர் மொய்தீன், “முஸ்லிம் சமுதாய மக்களுக்கு குறைந்தது 15 இடங்களாவது வேண்டும் என்று கடந்த தேர்தலின் போது கோரிக்கை விடுத்தேன். ஆனால் அப்போது தமிழகத்தில் 16 தொகுதிகளைத் தந்தார். இதுதான் நடந்தது. வரக் கூடிய தேர்தலில் இதை விட அதிக இடங்களைக் கொடுப்பார் ஸ்டாலின் என்று நான் நம்புகிறேன். அப்படிப்பட்ட தாராள உள்ளத்தைப் பெற்றவர் ஸ்டாலின். நான் உடல் நலம் நலிவுற்றிருந்தபோது என்னை சந்தித்த பலரில் உளவுத்துறை அதிகாரிகளும் உண்டு. அவர்கள்,’வரும் தேர்தலில் திமுக கூட்டணிதான் அதிக இடங்களில் வெற்றிபெறும். அதனால் அதிக இடங்களைக் கேட்டுப் பெறுங்கள்’ என்று கூறினார்கள்" என்று பேசினார். .

அதற்கு பதிலளித்து அதே மேடையில் ஸ்டாலின் பேசியபோது,, “கலைஞர் அவர்கள் முந்தைய தேர்தலில் ஒதுக்கிய இடங்களை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன் அவர்கள், வெளிப்படையாகவே சுட்டிக்காட்டி, என்னிடம் உள்ள உரிமையின் காரணமாக கேட்டார். இடம் குறித்துக் கவலை கொள்ள வேண்டாம். நாம் ஆட்சியமைக்கப் போகிறோம். அதுதான் முக்கியம்”என்று பதிலளித்தார்.

இந்த பின்னணியில்தான் துரைமுருகனை சந்தித்துப் பேசினார் காதர் மொய்தீன். 2016 சட்டமன்றத் தொகுதியில் முஸ்லிம் லீக் 5 தொகுதிகளில் போட்டியிட்டது. இதை சுட்டிக் காட்டி அதற்கு மேல்தான் இம்முறை தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார். ஆனால் துரைமுருகனோ, “பாய்...ரெண்டு சீட்டு கொடுக்குறோம். உங்க சின்னத்துலயே போட்டியிடுங்க. மத்ததை எல்லாம் நாங்களே பாத்துக்குறோம். வெற்றி தான நமக்கு முக்கியம்’என்று கூறியிருக்கிறார்.

இதைக் கேட்டு காதர் மொய்தீன் கட்சியினரிடம் பேசிவிட்டு வருவதாகக் கூறித் திரும்பியுள்ளார்.

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வியாழன் 4 பிப் 2021