மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 பிப் 2021

அதிமுக- பாமக: பேச்சு வார்த்தையில் நடந்தது என்ன, நடப்பது என்ன?

அதிமுக- பாமக:  பேச்சு வார்த்தையில் நடந்தது என்ன, நடப்பது என்ன?

அதிமுகவுக்கும், பாமகவுக்கும் இடையில் வன்னியர் இட ஒதுக்கீடு உள்ளடக்கிய கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்று (பிப்ரவரி 4) பகலில் தொடங்கி இரவிலும் தொடர்கிறது.

கடந்த ஜனவரி 30 ஆம் தேதி அமைச்சர்கள் சி.வி.சண்முகம். கே.பி.அன்பழகன், தங்கமணி, வேலுமணி ஆகியோர் தைலாபுரம் தோட்டத்துக்குச் சென்று டாக்டர் ராமதாசிடம் பேசினார்கள். இதுகுறித்து அதிமுக தரப்பில் இருந்து எந்த வித கருத்தும் வெளியிடப்படாத நிலையில், மறுநாள் 31 ஆம் தேதி பாமகவின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ்,

“நேற்று இரவு அமைச்சர்கள் என்னை சந்தித்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தலாம். அதில் உங்கள் பிரதிநிதிகளை அனுப்புங்கள் என்று கூறினார்கள். எனவே நாம் பிப்ரவரி 3 ஆம் தேதி பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுவிட்டு அதன் பின் முடிவெடுப்போம்”என்று கூறி அதன்படி அரசியல் தீர்மானமாகவும் இது நிறைவேற்றப்பட்டது.

இந்தப் பின்னணியில் இன்று (பிப்ரவரி 3) சென்னையில் அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் அதிமுகவுக்கும் பாமகவுக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. அன்று தைலாபுரம் தோட்டத்துக்குச் சென்ற அமைச்சர்களோடு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமியும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டதாகச் சொல்கிறார்கள்.

பாமக சார்பில் அதன் தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் கே.பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இன்று முற்பகல் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையில் பாமக தரப்பினர் வன்னியர்களுக்கு 15 அல்லது 16% உள் இட ஒதுக்கீட்டில் உறுதியாக இருந்ததாகத் தெரிகிறது. இதற்கு அதிமுக சார்பில் சட்ட ரீதியாக காரணங்களை சுட்டிக் காட்டியதாகத் தெரிகிறது.

அத்தோடு பேச்சுவார்த்தை முடிந்து அமைச்சர்கள் குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கச் சென்றனர். பாமக தலைவர் ஜி.கே.மணி ஆழ்வார் பேட்டையில் தங்கியிருந்த ராமதாஸை சந்திக்கச் சென்றார். இந்தப் பின்னணியில்தான் இன்று பகல் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,’

“சட்டத்திற்காக மக்களா .... மக்களுக்காகச் சட்டமா? மக்களுக்காகத் தான் சட்டங்களே தவிர, சட்டங்களுக்காக மக்கள் அல்ல... அதனால் தான் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதுவரை 104 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன”என்று ட்விட் செய்திருந்தார்.

சட்ட ரீதியாக உள் ஒதுக்கீட்டில் இருக்கும் சிக்கல்கள் பற்றி ஆளும் அதிமுக தரப்பில் கூறிய தகவல் தனக்குக் கிடைத்ததன் பேரிலேயே ராமதாஸ் இந்த ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் அமைச்ச்ர்கள் இன்று மாலை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பகலில் நடந்த பேச்சுவார்த்தை பற்றி விளக்கியிருக்கிறார்கள். எந்த ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில்... அதிமுக- பாமக இடையிலான பேச்சுவார்த்தை இன்று (பிப்ரவரி 3) மாலையும் அமைச்சர் தங்கமணி வீட்டில் தொடர்கிறது.

-வேந்தன்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

புதன் 3 பிப் 2021