மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 பிப் 2021

சசிகலா வருகை : அதிமுக தலைமைக் கழகத்திலும் கட்டுப்பாடுகள்?

சசிகலா வருகை :  அதிமுக தலைமைக் கழகத்திலும் கட்டுப்பாடுகள்?

அதிமுகவின் முன்னாள் தற்காலிகப் பொதுச் செயலாளர் சசிகலா சிறை தண்டனையில் இருந்து விடுதலை பெற்று, கொரோனா தொற்றில் இருந்தும் விடுதலை பெற்று தற்போது பெங்களூருவில் ஓய்வெடுத்து வருகிறார். வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி சசிகலா சென்னை திரும்புவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 2) சென்னை மெரினாவில் இருக்கும் ஜெயலலிதாவின் நினைவிடத்தை பராமரிப்புப் பணிகள் காரணமாக 15 நாட்கள் மூடி வைப்பதாகவும், பார்வையாளர் நுழைய தடை விதிக்கப்படுவதாகவும் தமிழக அரசின் பொதுப்பணித்துறை அறிவித்தது.

பெங்களூருவில் இருந்து புறப்படும் சசிகலா சென்னை வந்தபின்பு மெரினாவில் இருக்கும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்வதாக தகவல் கிடைத்த நிலையில், அதைத் தடுப்பதற்காகத்தான் நினைவிடத்தை பராமரிப்புப் பணி என்ற பெயரில் அரசு மூடியிருப்பதாக அமமுகவினர் கூறுகிறார்கள்.

இந்நிலையில் அதிமுக அலுவலகத்தை மையமாக வைத்து அடுத்த கட்ட பரபரப்பு கிளம்பியுள்ளது. ஜெயலலிதா காலமான பிறகு 2016 ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழுவில் சசிகலாவை தற்காலிக பொதுச் செயலாளராக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுத்தனர். பின் சசிகலாவை அதிமுக தலைமைக் கழகத்திலுள்ள பொதுச் செயலாளரின் அறையில் அமர வைத்தனர்.

இந்த பின்னணியில் சென்னை வந்தபிறகு சசிகலா, அதிமுக தலைமை அலுவலகத்துக்கும் செல்லத் திட்டமிட்டிருக்கிறார். இந்தத் தகவலை அறிந்த ஆளுந்தரப்பின் மேலிடம், அதிமுக தலைமைக் கழகத்தில் எப்போதும் ஒரு கதவை மூடியே வைக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் கூட்டமாக யாரும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வரவேண்டாம் என்றும், தலைமைக் கழகத்தின் பணியாளர்கள் மட்டுமே அடுத்த உத்தரவு வரும் வரை அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படவேண்டும் என்றும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

புதன் 3 பிப் 2021