மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 பிப் 2021

தினகரன்-சசிகலா: அதிமுகவின் இறுக்கம் குறைகிறதா?

தினகரன்-சசிகலா: அதிமுகவின் இறுக்கம் குறைகிறதா?

டிடிவி தினகரன் தான் செய்ததெல்லாம் தவறு என்று கடிதம் எழுதிக் கொடுத்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள பரிசீலிக்கப்படும் என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.

நேற்று (ஜனவரி 31) சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி புறப்படும்போது அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து கடுமையான விமர்சனங்கள் அதிமுக தரப்பில் இருந்து எழுந்துள்ளன.

அமைச்சர் ஜெயக்குமார், சண்முகம் ஆகியோர் இதற்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த நிலையில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நேற்று (ஜனவரி 31) செய்தியாளர்களிடம் பேசினார்.

“சசிகலா என்பவர் அதிமுகவில் உறுப்பினரே அல்ல. ஒவ்வொரு முறையும் உறுப்பினர் காலம் முடிவடைந்ததும் தங்கள் உறுப்பினரை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவர் புதுப்பித்துக் கொள்ளவில்லை. எனவே சசிகலா அதிமுகவின் உறுப்பினரே இல்லை.

தவறு செய்து கட்சியை விட்டு வெளியேற்றப்படுகிறவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் தலைமை மீண்டும் அவர்களை கட்சியில் சேர்த்துக் கொள்வது பற்றி பரிசீலிக்கும் இதுபோல டிடிவி தினகரன் தான் செய்தது தவறு என்று சொல்லி வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்தால் தலைமை பரிசீலித்து முடிவெடுக்கும்”என்றார்.

இந்நிலையில் பெங்களூருவில் டிடிவி தினகரன் பேசும்போது, “இப்போது பேசும் இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் பொதுக்குழுவைக் கூட்டி சசிகலாவை பொது செயலாளராக தேர்ந்தெடுத்தனர். பொதுச் செயலாளரை யாரும் நீக்க முடியாது. அவர்களுக்கு கட்சியின் பைலா தெரியுமா? சசிகலாதான் பொதுச் செயலாளராக இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

சட்டப் போராட்டத்தில் சசிகலாவும், ஜனநாயகப் போராட்டத்தில் அமமுகவும் வெல்லும்வரை ஸ்லீப்பர் செல்கள் தங்கள் வேலைகளைச் செய்துகொண்டே இருப்பார்கள்” என்று தெரிவித்தார்.

-வேந்தன்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

திங்கள் 1 பிப் 2021