மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 ஜன 2021

சசிகலா காரில் அதிமுக கொடி!

சசிகலா காரில் அதிமுக கொடி!

அதிமுகவின் முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளர் சசிகலா இன்று பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த 3 நாட்களாக அவரது சுவாசம் இயல்பாக இருப்பதாலும் கொரோனா அறிகுறிகள் இல்லாததாலும் சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அதேநேரம் அவர் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று (ஜனவரி 31) சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வந்தார். அவர் பெங்களூருவில்தான் சில நாட்கள் தங்கப் போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனை வாசலில் அவரது காரை பூக்கள் தூவி அமமுக தொண்டர்கள் வரவேற்றனர்.

சசிகலாவைப் பார்த்ததை விட அவரது காரைப் பார்த்ததும் தொண்டர்கள் மேலும் உற்சாகம் அடைந்தனர். ஏனெனில் அதிமுக பொதுச் செயலாளராக இருந்தபோது ஜெயலலிதா பயன்படுத்திய காரான டி.என்.09 BX 3737 என்ற காரில் முன்னால் அதிமுக கொடி பறக்க சசிகலா மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார்.

கடந்த ஜனவரி 18 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, “சசிகலா அதிமுகவில் உறுப்பினரே கிடையாது. அவர் கட்சியில் சேர நூறுசதவிகிதம் வாய்ப்பே இல்லை” என்று கூறினார். ஆனால் இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இதுவரை எந்தக் கருத்தும் கூறவில்லை. மாறாக அவரது மகன் ஜெய பிரதீப் தனது சமூக தளத்தில் சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்ற முதல்வரால் கூறப்பட்ட நிலையில் சசிகலா இன்று தனது காரில் அதிமுக கொடியை கட்டிக் கொண்டு புறப்பட்ட காட்சி தமிழ்நாடு அரசியலில் அதிர்வுகளை உண்டாக்கியுள்ளது.

சசிகலா தமிழகத்துக்குள் நுழைந்ததும் அடுத்த கட்ட பரபரப்புகள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

ஞாயிறு 31 ஜன 2021