மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 ஜன 2021

எடப்பாடி-சண்முகம் கெமிஸ்ட்ரி: ஆலோசகராகும் தலைமைச் செயலாளர்

எடப்பாடி-சண்முகம் கெமிஸ்ட்ரி: ஆலோசகராகும் தலைமைச் செயலாளர்

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பணிபுரிந்த கே. சண்முகத்தின் பதவி காலம் இன்றோடு (ஜனவரி 31) முடிவடையும் நிலையில் அவர் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியோடு இணைந்து 2019 ஜூலை முதல் பணியாற்றி வந்தார்.

வேளாண் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற சண்முகம், ஏற்கனவே வேளாண்மை தொடர்பான திட்டங்களில் சிறப்பு ஆர்வம் காட்டுபவர். தமிழக முதல்வருக்கு விவசாயி என்ற இமேஜ் கிடைப்பதற்கான புதிய திட்டங்களை தீட்டுவதில் முக்கியப் பங்காற்றினார். குறிப்பாக சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா என்ற பிரம்மாண்டத் திட்டத்துக்கு தலைமைச் செயலாளர் கே. சண்முகத்தின் பங்கு முக்கியமானது.

இப்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தலைமைச் செயலாளர் சண்முகத்துக்குமான கெமிஸ்ட்ரி அதிகாரிகள் வட்டாரம் தாண்டி அரசியல் வட்டாரம் வரை பேசப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு பணி நீட்டிப்பு வழங்கினார் முதல்வர். இதையடுத்து ஜனவரி 31 ஆம் தேதியோடு ஓய்வுபெறும் சண்முகத்தை ஆட்சி முடியும் வரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் அவரை தமிழக அரசின் ஆலோசகராக நியமித்துள்ளார் முதல்வர்.

ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், ஓய்வுக்குப் பிறகு ஜெ.வின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதே பாணியில் இப்போது சண்முகத்தை ஆலோசகராக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

-வேந்தன்

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

ஞாயிறு 31 ஜன 2021