மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 30 ஜன 2021

சசிகலா டிஸ்சார்ஜ்: தனிமைப்படுத்த அறிவுரை!

சசிகலா டிஸ்சார்ஜ்: தனிமைப்படுத்த அறிவுரை!

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த சசிகலா நாளை (ஜனவரி 31) டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். ஆனாலும் அவர் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இன்று பிற்பகல் சசிகலாவை சோதித்த மருத்துவர்கள் குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக விக்டோரியா மருத்துவ மையத்தை உள்ளடக்கிய பெங்களூரு மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 20ஆம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலாவுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு அன்றுமாலை பெங்களூருவில் உள்ள பௌரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு ஜனவரி 21ஆம் தேதி விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கே அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஜனவரி 27ஆம் தேதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட படி தண்டனை காலம் முடிந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டார். எனினும் தொற்று பாதிப்பு முழுமையாக நீங்கும் வரை அவர் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே சசிகலா இயல்பு நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கைகள் தெரிவித்தன.

”இன்று பிற்பகல் சசிகலாவை பரிசோதித்த மருத்துவர்கள் குழு, அவருக்கு கொரோனா தொற்று முற்றிலும் நீங்கிவிட்டதாகவும், அதனால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட தகுதிபெற்றுவிட்டதாகவும் தெரிவித்தது. கடந்த 3 நாட்களாக அவர் இயல்பாக சுவாசித்து வருகிறார். அதனால் அவர் டிஸ்சார்ஜ் செய்ய உடல் நிலை தகுதியாகிவிட்டது” என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. அதேநேரம் குறைந்தது இரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் டிஸ்சார்ஜ் ஆன பிறகு சசிகலா பெங்களூருவிலேயே தங்கியிருப்பாரா, அல்லது சென்னை திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

-வேந்தன்

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

சனி 30 ஜன 2021