மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 30 ஜன 2021

வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கத் தயார்: பிரதமர் மோடி

வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கத் தயார்: பிரதமர் மோடி

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த மூன்று மாதங்களாக டெல்லியில் விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் குடியரசுத் தலைவர் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த சூழலில், இன்று (ஜனவரி 30) டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார் பிரதமர்.

அதில் பேசிய பிரதமர் மோடி, “ மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு இன்னும் அப்படியே உள்ளது. மூன்று சட்டங்களையும் ஒன்றரை வருடத்துக்கு அமல்படுத்துவதை நிறுத்தி வைப்பதாக ஏற்கனவே மத்திய அரசு கொடுத்த முன்மொழிவு அப்படியே உள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகளுடனும் விவசாயிகளுடனும் பேச வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு உரையாடலின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும். நாம் அனைவரும் தேசத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளிடம் கூறியதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். ‘நாம் ஒருமித்த கருத்தை இன்னும் எட்டவில்லை. ஆனாலும் நாம் தொடர்ந்து பேசுவோம். எப்போது வேண்டுமானாலும் பேசலாம். உங்களிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பின் தூரத்தில்தான் நான் இருக்கிறேன்’ என்று தோமர் சொன்னதையே நானும் சொல்கிறேன்” என்று கூறியிருக்கிறார் பிரதமர்.

நாடாளுமன்றத்தில் அடிக்கடி இடையூறுகள் ஏற்படுவதால் சிறிய கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அவர்களுக்கு தங்கள் கருத்துகளை எடுத்து வைக்க நேரம் கிடைப்பதில்லை. எனவே , நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த பெரிய கட்சிகள் உதவ வேண்டும்”என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த ஜனவரி 26-ஆம் தேதி டெல்லி விவசாயிகள் பேரணியில் நடந்த வன்முறையைக் குறிப்பிட்டுப் பேசிய கட்சித் தலைவர்களுக்கு, சட்டம் தனது கடமையை செய்யும் என்று பிரதமர் பதிலளித்தார்.

ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இந்த வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

சனி 30 ஜன 2021