மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 30 ஜன 2021

100 ஆண்டுக்காலம் அதிமுக ஆட்சிக்கு உழைப்போம் : ஜெ.கோயில் திறப்பு விழாவில் முதல்வர்!

100 ஆண்டுக்காலம் அதிமுக ஆட்சிக்கு உழைப்போம் : ஜெ.கோயில் திறப்பு விழாவில் முதல்வர்!

100 ஆண்டுக்காலம் அதிமுக ஆட்சி நீடிக்க உழைப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் ஜெயலலிதா பேரவை மற்றும் அம்மா சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் பகுதியில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குக் கோயில் கட்டப்பட்டுள்ளது.

12 ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதில் 7 அடி உயரம், 400கிலோ எடையுடன் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆருக்கு வெண்கலச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோயில் திறப்பு விழாவையொட்டி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடந்த ஜனவரி 14ஆம் தேதி சிலைகளைப் பிரதிஷ்டை செய்தார். இதைத் தொடர்ந்து தினசரி பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. கடந்த இரு நாட்களாக யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில் இன்று கோயில் திறப்பு விழா நடைபெற்றது.

கோயிலை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் கலையரங்கம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.

பின்னர் நடைபெற்ற கோ பூஜையில் முதல்வரும் துணை முதல்வரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து 120 பசுக்களை பொது மக்களுக்குத் தானமாக வழங்கினர். அதோடு 234 தொகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு மாலை அணிவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தனர். இவ்விழாவில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  “வாழ்நாள் முழுவதும் தங்களுக்காக அல்லாமல் மக்களுக்காக வாழ்ந்தவர்கள் ஜெயலலிதாவும், எம்ஜிஆரும்.  அவர்கள் செய்த  பணிகள், என்றென்றும் மக்களால் மறக்க முடியாத திட்டங்களாகும். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. அதிமுகவினரும், மக்களும்தான் அவர்களுக்குப் பிள்ளைகள்.  அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன், மீண்டும் தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி அமைக்கப் பாடுபட வேண்டும். அதுதான் அதிமுகவினருடைய எண்ணமும் கூட. ஜெயலலிதா இதே மதுரை மண்ணில் 100 ஆண்டுக்காலம் அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்றார். அவரது சபதத்தை நிறைவேற்ற உழைப்போம். வெற்றி பெறுவோம். இன்று வரை அதிமுக 30 ஆண்டுக்காலம் இந்த மண்ணிலே ஆட்சி செய்துள்ளது. சட்டமன்றத் தேர்தலில் ஒருமித்த கருத்தோடு தேர்தல் பணியாற்றி மீண்டும் அதிமுக ஆட்சி தொடர அதிமுகவினர் உழைக்க வேண்டும்” என்று பேசினார்.

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ...

6 நிமிட வாசிப்பு

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்!

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? ...

10 நிமிட வாசிப்பு

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

5 நிமிட வாசிப்பு

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

சனி 30 ஜன 2021