மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 28 ஜன 2021

இரவுக்குள் இடத்தை காலி செய்யுங்கள்: போராடும் விவசாயிகளுக்கு எச்சரிக்கை!

இரவுக்குள் இடத்தை காலி செய்யுங்கள்: போராடும் விவசாயிகளுக்கு எச்சரிக்கை!

குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதியன்று டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இதையடுத்து விவசாய போராட்ட தலைவர்கள் மீது டெல்லி போலீஸ் வழக்குப் பதிந்து வருகிறது.

இந்நிலையில் டெல்லியை ஒட்டிய நகராட்சி நிர்வாகங்கள், இன்னமும் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் இன்று இரவுக்குள் (ஜனவரி 28) போராட்ட இடங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளன.

டிராக்டர் பேரணிக்குப் பிறகும் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தங்கள் போராட்டத்தைத் தொடர்கின்றன. போராடும் இடங்களில் டெல்லி-காசிப்பூர் எல்லைப் பகுதியும் ஒன்று. இங்கே ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் காசிபூரை உள்ளடக்கிய காஜியாபாத் நிர்வாகம் இன்று இரவுக்குள் விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொண்டு இடத்தை காலி செய்ய வேண்டும். இல்லையேல் ஜனவரி 29 காலை போலீஸே இடத்தை காலி செய்யும் என்று எச்சரித்துள்ளனர்.

இன்று காலை அங்கு முகாமிட்டுள்ள விவசாயிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தவர்பூர் மற்றும் ஹமீத்பூரைச் சேர்ந்த சுமார் 70-100 உள்ளூர்வாசிகள் சிங்கு எல்லையில் கூடினர். குடியரசு தினத்தன்று விவசாயிகள் வன்முறையைக் கண்டித்து பதாகைகள் மற்றும் பலகைகளை அவர்கள் சுமந்து விவசாயிகள் போராட்டத்தால் தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாக கூறினார்கள்.

விவசாயிகள் போராட்ட வன்முறையில் காயம் அடைந்த போலீசாரை மருத்துவமனையில் சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்வையிட்ட நிலையில்... டெல்லியை உள்ளிட்ட எல்லை பகுதிகளில் அந்தந்த உள்ளூர் மக்களின் எதிர்ப்பை காரணம் காட்டி போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

வியாழன் 28 ஜன 2021