மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 28 ஜன 2021

கூட்டணியை மீறி அதிமுக புள்ளியை அலேக் பண்ணிய அண்ணாமலை

கூட்டணியை மீறி அதிமுக புள்ளியை  அலேக் பண்ணிய அண்ணாமலை

‌சுமார்‌ ‌4‌ ‌மாதங்களுக்கு‌ ‌முன்பு‌ ‌கரூர்‌ ‌மாவட்டம்‌ ‌குளித்தலையைச்‌ ‌சேர்ந்த‌ ‌அதிமுக‌ ‌ பிரமுகர்‌ ‌மீனா‌ ‌வினோத்குமார்‌ ‌என்பவரை‌ ‌தங்கள்‌ ‌பக்கம்‌ ‌இழுத்த‌ ‌பி.ஜே.பி.,‌ ‌எடுத்த‌ ‌எடுப்பிலேயே‌ ‌அவருக்கு‌ ‌ மாநில‌ ‌மகளிர்‌ ‌அணித்தலைவி‌ ‌பதவி‌ ‌கொடுத்து‌ ‌அழகு‌ ‌பார்த்தது.‌ ‌இதையடுத்து,‌ ‌இன்று‌ ‌(28.01.2021)‌ ‌பாரதிய‌ ‌ஜனதா‌ ‌ கட்சியின்‌ ‌தேசிய‌ ‌பொதுச்செயலாளரும்‌ ‌தமிழக‌ ‌பொறுப்பாளருமான‌ ‌சி.டி.ரவி‌ ‌மற்றும்‌ ‌தமிழக‌ ‌பா.ஜ.க.‌ ‌தலைவர்‌ ‌ முருகன்‌ ‌ஆகியோர்‌ ‌முன்னிலையில்‌ ‌பி.ஜே.பி.யில்‌ ‌இணைந்துள்ளார்‌ ‌கரூர்‌ ‌மாவட்டத்தைச்‌ ‌சேர்ந்த‌ ‌அதிமுக‌ ‌ முக்கிய‌ ‌பிரமுகரான‌ ‌வி.வி.செந்தில்நாதன்.‌ ‌

‌அதிமுகவின்‌ ‌மாநில‌ ‌இளைஞர்‌ ‌மற்றும்‌ ‌இளம்பெண்கள்‌ ‌பாசறை‌ ‌முன்னாள்‌ ‌செயலாளராகவும்,‌ ‌ பின்னர்‌ ‌கரூர்‌ ‌மாவட்ட‌ ‌இளைஞர்,‌ ‌இளம்பெண்கள்‌ ‌பாசறை‌ ‌முன்னாள்‌ ‌செயலாளராகவும்‌ ‌பதவி‌ ‌வகித்தவர்‌ ‌வி.வி.செந்தில்நாதன்.‌

‌‌ ‌2011‌ ‌சட்டமன்ற‌ ‌தேர்தலில்‌ ‌திமுகவைச்‌ ‌சேர்ந்த‌ ‌பிரபல‌ ‌தொழிலதிபரும்‌ ‌ எக்ஸ்.எம்.பி.யுமான‌ ‌கே.சி.பழனிச்சாமியை‌ ‌எதிர்த்து‌ ‌போட்டியிட்ட‌ ‌செந்தில்நாதன்‌ ‌வெறும்‌ ‌4‌ ‌ஆயிரம்‌ ‌வாக்குகள்‌ ‌ வித்தியாசத்தில்‌ ‌தோல்வியைத்‌ ‌தழுவினார்.‌ இந்தத் தோல்விக்குப் பின்னணியில், ‌ ‌‘அதிமுக‌ ‌அமைச்சராக‌ ‌இருந்த‌ ‌வி.செந்தில்பாலாஜி,‌ ‌கரூர்‌ ‌ அதிமுகவில்‌ ‌தன்னைத்தவிர‌ ‌வேறு‌ ‌யாரும்‌ ‌வளர்ந்து‌ ‌விடக்‌ ‌கூடாது‌ ‌என‌ ‌உள்ளடி‌ ‌வேலை‌ ‌பார்த்து‌ ‌விட்டதாக’‌ ‌ அப்போதே‌ ‌பரபரப்பாக‌ ‌பேசப்பட்டது.‌ ‌ ‌

‌அதன்‌ ‌பிறகு,‌ ‌2016‌ ‌தேர்தலில்‌ ‌அதே‌ ‌அரவக்குறிச்சியில்‌ ‌நின்று‌ ‌வெற்றி‌ ‌பெற்ற‌ ‌செந்தில்பாலாஜி‌ ‌ டி.டி.வி.‌ ‌தினகரன்‌ ‌அணிக்கு‌ ‌தாவிய‌ ‌காரணத்தால்‌ ‌அவரது‌ ‌எம்.எல்.ஏ.‌ ‌பதவி‌ ‌பறிக்கப்பட்டது.‌ ‌இதனையடுத்து‌ ‌ திமுகவிற்கு‌ ‌சென்ற‌ ‌அவர்‌ ‌மீண்டும்‌ ‌2019‌ ‌அரவக்குறிச்சி‌ ‌இடைத்தேர்தலில்‌ ‌போட்டியிட்ட‌ ‌போது‌ ‌செந்தில்‌ ‌ பாலாஜியை‌ ‌எதிர்த்து‌ ‌போட்டியிட‌ ‌தம்பிதுரையின்‌ ‌ஆலோசனைப்படி‌ ‌களமிறக்கப்பட்டார்‌ ‌வி.வி.செந்தில்நாதன்.‌ ‌

இந்தத்‌ ‌தேர்தலிலும்‌ ‌செந்தில்நாதன்‌ ‌தோல்வியை‌ ‌தழுவவே,‌ ‌இவரிடம்‌ ‌இருந்த‌ ‌கரூர்‌ ‌மாவட்ட‌ ‌இளைஞர்,‌ ‌ இளம்பெண்கள்‌ ‌பாசறை‌ ‌செயலாளர்‌ ‌பதவி‌ ‌பறிக்கப்பட்டு‌ ‌போக்குவரத்து‌ ‌துறை‌ ‌அமைச்சரும்‌ ‌கரூர்‌ ‌அதிமுக‌ மா.செ.வுமான‌ ‌எம்.ஆர்.விஜயபாஸ்கரின்‌ ‌தீவிர‌ ‌ஆதரவாளரான‌ ‌கமலக்கண்ணன்‌ ‌என்பவருக்கு‌ ‌வழங்கப்பட்டது.‌ ‌ ‌

‌இருந்த‌ ‌போதும்‌ ‌தானுண்டு,‌ ‌தன்னுடைய‌ ‌கிரானைட்‌ ‌தொழில்‌ ‌உண்டு‌ ‌என‌ ‌அமைதியாக‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌ இருந்த‌ ‌வி.வி.செந்தில்நாதன்,‌ ‌வரவிருக்கும்‌ ‌சட்டமன்ற‌ ‌தேர்தலில்‌ ‌தனக்கு‌ ‌மீண்டும்‌ ‌போட்டியிட‌ ‌வாய்ப்பு‌ ‌ கிடைக்கும்‌ ‌என‌ ‌நம்பியிருந்தார்.‌ ‌அதே‌ ‌நேரத்தில்,‌ ‌அமைச்சர்‌ ‌எம்.ஆர்.விஜயபாஸ்கர்‌ ‌மற்றும்‌ ‌அவரது‌ ‌ ஆதரவாளர்களால்‌ ‌செந்தில்நாதன்‌ ‌தொடர்ந்து‌ ‌புறக்கணிக்கப்பட்டு‌ ‌வந்ததாகவும்‌ ‌கூறப்படுகிறது.‌ ‌இதனால்,‌ ‌ தனக்கு‌ ‌மீண்டும்‌ ‌கட்சிப்‌ ‌பதவியோ‌ ‌அல்லது‌ ‌தேர்தலில்‌ ‌சீட்டோ‌ ‌கிடைக்க‌ ‌வாய்ப்பில்லை‌ ‌என‌ ‌உறுதியாக‌ ‌தெரிந்த‌ ‌ நிலையில்‌... ‌ ‌அதனை‌ ‌சரியாகப்‌ ‌பயன்படுத்திய‌ ‌பி.ஜே.பி.யின்‌ ‌மாநில‌ துணைத் தலைவரும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான அண்ணாமலை தங்கள் சக கூட்டணிக் கட்சியாக இருந்தபோதும் அதிமுகவைச் சேர்ந்த ‌ ‌செந்தில்நாதனிடம் பேசி சம்மதிக்க வைத்திருக்கிறார் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

‌‌அதன்‌ ‌பிறகே‌ ‌ அண்ணாமலை முன்னிலையில் பி.ஜே.பி.யில்‌ ‌இணைந்திருக்கிறார்‌ ‌வி.வி.செந்தில்நாதன்‌ ‌.‌ ‌‌பி.ஜே.பி.யில்‌ ‌இணைந்துள்ள‌ ‌செந்தில்நாதனுக்கு‌ ‌மாநில‌ ‌அளவில்‌ ‌முக்கிய‌ ‌பதவி‌ ‌தருவதோடு,‌ ‌அதிமுக‌ ‌ கூட்டணியில்‌ ‌கரூர்‌ ‌அல்லது‌ ‌குளித்தலையில்‌ ‌போட்டியிட‌ ‌வாய்ப்பு‌ ‌வழங்கவிருப்பதாகவும்‌ ‌கூறப்படுகிறது.‌ ‌ ‌

‌தங்களுடன்‌ ‌கூட்டணியில்‌ ‌இருக்கும்‌ ‌பி.ஜே.பி.‌ ‌சமீப‌ ‌காலமாக‌ ‌தங்கள்‌ ‌கட்சியின்‌ ‌முக்கியப்‌ ‌ புள்ளிகளை‌ ‌குறி‌ ‌வைத்து‌ ‌‘தூக்கி’‌ ‌வருவதால்‌ ‌கலக்கத்தில்‌ ‌இருக்கிறது‌ ‌அதிமுக‌ ‌வட்டாரம்.

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

வியாழன் 28 ஜன 2021