மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 28 ஜன 2021

ஜெ.நினைவு இல்லம் திறப்பு: மக்கள் பார்ப்பது எப்போது?

ஜெ.நினைவு இல்லம் திறப்பு: மக்கள் பார்ப்பது எப்போது?

மறைந்த, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழகத்தின் அப்போதைய முதல்வருமான ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் இருக்கும் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கி இன்று (ஜனவரி 28) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்நிகழ்வுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார்.

ஜனவரி 27 ஆம் தேதி மெரினாவில் பிரம்மாண்ட பீனிக்ஸ் வடிவ ஜெ. நினைவிடம் திறந்ததை அடுத்து உடனடியாக இந்த நினைவில்லம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்துவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், மகன் தீபக்கும் வழக்குத் தொடுத்துள்ளனர்.

அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே தமிழக அரசு சார்பில் நினைவில்லம் அமைக்க குழு ஏற்படுத்தப்பட்டு அதன் படி நினைவிடத் திறப்புப் பணிகளைப் போலவே வேதா நினைவுஇல்லப் பணிகளும் வேகமெடுத்தன. போயஸ்கார்டன் ஜெயலலிதா வீடு சுத்தம் செய்யப்பட்டு வெள்ளையடிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நினைவு இல்லம் திறக்கப்படுமென்ற தமிழக அரசின் உத்தரவுக்கு தடை கேட்டு தீபக், தீபா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

“வேதா இல்லத்தில் ஜெயலலிதாவின் அம்மா அதாவது எங்கள் பாட்டி சந்தியாவுக்கு சொந்தமான பொருட்களும் இருக்கின்றன. ஜெயலலிதா பயன்படுத்திய கார்கள் குறித்து அரசு ஏதும் கூறவில்லை. நாங்கள் ஏற்கனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது திடீரென எப்படி நினைவு இல்லத்தைத் திறக்க முடியும்?” என்று தீபக் தரப்பில் வாதாடினார்கள்.

ஆனால் அரசு வழக்கறிஞர் விஜய் நாராயணனோ, “இந்த இல்லத்தை நினைவு இல்லமாக்குவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. வீட்டுக்கு வெள்ளையடித்து தோட்டத்தை ஒழுங்குபடுத்தியிருக்கிறோம்.வேறு எதையும் சிதைக்கவில்லை. எந்த பொருளையும் எடுக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்றம், “நாளை (ஜனவரி 28) வேதா இல்லத்தை ஜெ. நினைவு இல்லமாக திறக்கலாம். ஆனால், இல்லத்துக்குள் பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது. திறந்து வைத்த பிறகு இல்லத்தின் சாவியை நீதிமன்றப் பதிவாளரிடம் கொடுத்துவிட வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

அதன்படியே இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேதா இல்லத்தை திறந்தாலும் அதை பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை. அதிமுக தரப்பில் விசாரித்தபோது அந்த வழக்கின் அடுத்தடுத்த விசாரணைகளில் மக்கள் பார்வையிடுவதற்கு நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுவிடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வியாழன் 28 ஜன 2021