மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 28 ஜன 2021

திமுகவிடம் மமக கொடுத்த 15 தொகுதிகள் பட்டியல்!

திமுகவிடம் மமக கொடுத்த 15 தொகுதிகள் பட்டியல்!

கடந்த ஜனவரி 21-ம் தேதி நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின்..."உங்களில் பல பேர் இந்த கூட்டணி தொடர வேண்டும் என்றும் அதேநேரம் கூட்டணி கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறீர்கள். நம்மோடு கூட்டணியில் இருக்கும் கட்சிகள் திமுக நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் நம்மோடு உடன் வந்திருக்கிறார்கள். போராடியிருக்கிறார்கள். அவர்களை நாம் விட்டுவிட முடியாது. அதனால் சில மாவட்டச் செயலாளர்களுக்கு வாய்ப்பு இல்லை என்றால் கூட பொறுத்துக்கொள்ளுங்கள். நமது ஆட்சி அமைந்ததும் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காத மாவட்ட செயலாளர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் அளிக்கப்படும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வகையில் திமுகவின் தற்போதைய கூட்டணி தொடர வேண்டும் என்று விரும்பும் ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை கேட்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. .

அறிவாலயம் சார்பில், ’நீங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறுவதற்கான உங்களது ஆலோசனைகள்’ ஆகியவற்றை கூறுங்கள் என்று சில கூட்டணிக் கட்சிகளிடம் கேட்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் 15 தொகுதிகள் அடங்கிய பட்டியல் அறிவாலயத்தில் சில நாட்களுக்கு முன்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நின்ற தொகுதிகள், வென்ற தொகுதிகள், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் ஆகியவை உள்ளிட்ட இந்த 15 தொகுதிகளில் இருந்து திமுக சிற்சில இடங்களை தேர்ந்தெடுக்கும் என்று தெரிகிறது.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 28 ஜன 2021