மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 28 ஜன 2021

அடுத்த தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?

அடுத்த தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட இருக்கிறார் என்று கோட்டை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன.

தற்போது தலைமைச் செயலாளராக இருக்கும் சண்முகத்தின் நீட்டிக்கப்பட்ட பதவிக் காலம் வரும் ஜனவரி 31 ஆம் தேதியோடு முடிகிறது. இந்நிலையில் இதுவரையில் மத்திய அரசுப் பணியில் இருந்த ராஜீவ் ரஞ்சனை தமிழக அரசுப் பணிக்கு அனுப்புமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது. இதை ஏற்று ராஜீவ் ரஞ்சனை மத்திய அரசுப் பணியில் இருந்து விடுவித்து நேற்று (ஜனவரி 27) மத்திய அமைச்சரவைக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து ராஜீவ் ரஞ்சனே தமிழக அரசின் அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட இருக்கிறார் என்று தகவல்கள் அலையடிக்கின்றன. ராஜீவ் ரஞ்சன் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். 22-9-1961-ல் பிறந்த அவர், எம்.எஸ்.சி., எம்.பி.ஏ. பட்டங்களை பெற்றுள்ளார். இதுதவிர அறிவுசார் சொத்துரிமையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தமிழக அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்த ராஜீவ் ரஞ்சன், தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருத மொழிகளில் நல்ல புலமை மிக்கவர்.

ராஜீவ் ரஞ்சன் வருகிற செப்டம்பர் மாதம் 31 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார் என்பதால், அவர் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றாலும் குறுகிய காலமே அப்பொறுப்பில் இருப்பார். தேர்தல் வரும் காலகட்டத்தில் இது முக்கியத்துவம் மிகுந்ததாக பார்க்கப்படுகிறது.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வியாழன் 28 ஜன 2021