மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 26 ஜன 2021

டிராக்டர் பேரணி: டெல்லியில் வன்முறை!

டிராக்டர் பேரணி: டெல்லியில் வன்முறை!

குடியரசு தினமான இன்று (ஜனவரி 26) தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாய கூட்டமைப்பினருக்கும் போலீஸாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் டெல்லி முழுதும் பதற்றமாகியிருப்பதால் இணைய சேவை டெல்லியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை முதலே நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் டிராக்டர்களில் புறப்பட்ட விவசாயிகள் டெல்லி நகரின் எல்லைக்குள் நுழைந்தனர், சிங்கு உள்ளிட்ட பல பகுதிகளில் போலீசார் கடுமையான தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தபோதும் விவசாயிகள் அந்தத் தடையை உடைத்துக் கொண்டு டெல்லியை நோக்கி முன்னேறினார்கள்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இரு மாதங்களாக நடக்கும் இந்தப் போராட்டத்தின் முக்கியமான கட்டமாக குடியரசு தினத்தன்று செங்கோட்டையை நோக்கி தேசியக் கொடிகளோடு டிராக்டர் பேரணி நடத்துவது என்று விவசாயிகள் முடிவு செய்தனர். அதை உச்ச நீதிமன்றம் தடுக்கவில்லை. இந்த நிலையில் போலீஸார் ஏற்படுத்திய கடுமையான தடைகளை உடைத்து விவசாயிகள் டெல்லியின் மையப் பகுதியான செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர், அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் முன்பே தீர்மானிக்கப்பட்ட பாதைகளில் இருந்து விலகிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டி, போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

டெல்லி எல்லைப் புள்ளிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே காவல்துறையினருடன் மோத ஆரம்பித்தனர். அவர்கள் தலை நகரத்திற்குள் நுழைவதற்கு போலீஸார் வைத்திருந்த தடுப்புகளை உடைத்தனர். காசிப்பூர், சிங்கு மற்றும் திக்ரி எல்லைப் புள்ளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தனர். வழக்கமாக குடியரசு நாளன்று நடக்கும் பேரணி முடிந்து டிராக்டர் பேரணி நடத்துவதற்கு போலீஸ் அனுமதி அளித்திருந்தது. ஆனால் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே விவசாயிகள் தலைநகருக்குள் நுழைந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் ஒரு பகுதியினர் செங்கோட்டைக்குள் நுழைந்து அதன் சில குவிமாடங்களில் கொடிகளை ஏற்றினர். தங்கள் டிராக்டர்களை செங்கோட்டை வளாகத்திற்கு ஓட்டிச் சென்றனர். . டெல்லியின் டிடியு மார்க்கில் போராட்டத்தின் போது ஒரு டிராக்டர் கவிழ்ந்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். ஆங்காங்கே போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் மோதல் வெடித்தது.

ராஜ்பாத் நோக்கிச் செல்லும் முயற்சியில் பாராளுமன்றத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஐ.டி.ஓ-க்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். இதையடுத்து டெல்லியின் முக்கிய பகுதிகளில் இன்று இணைய சேவைகள் முடக்கப்பட்டன.

-வேந்தன்

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

செவ்வாய் 26 ஜன 2021