மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 26 ஜன 2021

சசிகலா உடல் நிலை: இன்றைய நிலவரம்!

சசிகலா உடல் நிலை: இன்றைய நிலவரம்!

ஜனவரி 20 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து அருகே உள்ள பௌரிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சசிகலா, அதன் பின் விக்டோரியா கொரோனா சிகிச்சை மையத்தில் ஜனவரி 21 ஆம் தேதி சேர்க்கப்பட்டார்.

தொடர்ந்து 6 நாட்களாக அங்கே சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல் நிலை பற்றி விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தினமும் செய்திக் குறிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஜனவரி 26) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

“ சசிகலாவின் நாடித் துடிப்பு நிமிடத்துக்கு 65 என்ற நிலையில் நார்மலாக இருக்கிறது. ரத்த அழுத்தம் 156/76 mm hg என்ற அளவில் நார்மலாக உள்ளது. சுவாசத்தின் எண்ணிக்கை நிமிடத்துக்கு 20 என்ற வகையில் நார்மலாக இருக்கிறது. சசிகலாவின் ஆக்ஸிஜன் 97% இயற்கையாகவே கிடைக்கிறது. நிமிடத்துக்கு 2 லிட்டர் வீதம் ஆக்ஸிஜன் அளிக்கப்படுகிறது. சர்க்கரை அளவு 178 ஆக உள்ளது. இதற்காக இன்சுலின் கொடுக்கப்பட்டு வருகிறது” என விவரங்களைக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், “சசிகலாவின் உடல் நிலை சீராக இருக்கிறது. அவர் வழக்கமான முறையில் உணவு உட்கொள்கிறார். நடக்கும்போது மட்டும் பக்கபலம் தேவைப்படுகிறது. கொரோனா தொற்று பாதிப்புக்கு உண்டான வழிமுறைகளைப் பின்பற்றி அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சசிகலா மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் நலமோடு இருக்கிறார்”என்று கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 27 ஆம் தேதி வரை மருத்துவமனையிலேயே இருக்கும் பட்சத்தில் அவர் விடுதலை அடைந்துவிட்டதாகக் கருதப்படும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவதே சசிகலாவின் விடுதலையாக கொள்ளப்படும்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

செவ்வாய் 26 ஜன 2021