மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 26 ஜன 2021

வேளாண் சட்டங்கள்: குடியரசுத் தலைவர் உரையும் டிராக்டர் பேரணியும்!

வேளாண் சட்டங்கள்:  குடியரசுத் தலைவர் உரையும் டிராக்டர் பேரணியும்!

இந்தியாவின் 72 ஆவது குடியரசுத் திருநாளை ஒட்டி குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதை ஒட்டி நேற்று (ஜனவரி 25) அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.

“உலகின் மிகப்பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு, என் இதயம்கனிந்த நல்வாழ்த்துகள். குடியரசுத் திருநாள் என்ற தேசியப் பெருநாளையும் நாம் நிறை குதூகலத்தோடு கொண்டாடும் வேளையில், நமது தேசியக் கொடி மற்றும் அரசியல் அமைப்புச் சட்டத்தின்பால் மரியாதையையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறோம்”என்று குறிப்பிட்டுள்ளார் ராம்நாத் கோவிந்த்.

குடியரசுத் திருநாளை ஒட்டி வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் பிரம்மாண்டமான விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடக்கும் நிலையில், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.,

“பெரும் மக்கட்தொகை கொண்ட நமது தேசத்தை உணவுதானியங்கள் மற்றும் பால்பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்யும் நமது விவசாய சகோதர சகோதரிகள் அனைவரையும், நாட்டுமக்கள் அனைவரும் வாழ்த்துகிறார்கள். தீவிரமான இயற்கைச் சூழல்களையும், அநேக சவால்களையும், கோவிட் பெருந்தொற்று ஆகியவற்றையும் தாண்டி நமது விவசாய சகோதர சகோதரிகள், வேளாண் உற்பத்தியில் எந்தக் குறைவையும் ஏற்பட விடவில்லை. நன்றியுடைய நமது தேசம், நமது அன்னமளிக்கும் விவசாயிகளின் நலனுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கின்றது”என்று விவசாயிகளைப் பாராட்டும் ராநாத் கோவிந்த்,

விவசாய சட்டங்கள் பற்றியும் தன் பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.

“ முழுவேகத்தோடு முன்னேறிவரும் நமது பொருளாதார சீர்திருத்தங்களின் நிறைவாக, புதிய சட்டங்களின் உருவாக்கம் வாயிலாக, நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த, விவசாயம் மற்றும் தொழில் துறைகளில் மேம்பாடு காணப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் இந்தச் சீர்திருத்தங்கள் பற்றிய ஐயப்பாடுகள் ஏற்படலாம். ஆனால், விவசாயிகளின் நலனில் அரசாங்கம் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது என்பதில் எந்தவொரு ஐயப்பாடும் கிடையாது”என்று வேளாண் சட்டங்கள் பற்றி தெரிவித்துள்ளார் குடியரசுத் தலைவர்.

-வேந்தன்

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

செவ்வாய் 26 ஜன 2021