மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 25 ஜன 2021

சிறை- கொரோனா: இரண்டில் இருந்தும் சசிகலா விடுதலை!

சிறை- கொரோனா: இரண்டில் இருந்தும் சசிகலா விடுதலை!

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்று பிப்ரவரி 2017 முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, வரும் ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை ஆகிறார். இந்தத் தகவலை சிறை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனாலும், கடந்த ஜனவரி 20 ஆம் தேதி சிறையில் இருந்த சசிகலாவுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு அருகே உள்ள பௌரிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் சசிகலாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர் விக்டோரியா கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரலில் அதிக அளவு நிமோனியா தாக்கத்தோடு கொரோனா தொற்றும் சேர்ந்துகொள்ள சசிகலாவின் உடல்நிலை அவரைச் சார்ந்தவர்களுக்கு கவலை அளித்தது. இந்நிலையில் தொடர் சிகிச்சையின் மூலம் சசிகலா கொரோனாவில் இருந்து விடுபட்டு வருகிறார் என்று விக்டோரியா மருத்துவமனை இன்று (ஜனவரி 25) தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவிதினகரன் இன்று (ஜனவரி 25) தனது ட்விட்டர் பக்கத்தில்,

“ நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்”என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஜனவரி 27 ஆம் தேதி அதிகாரபூர்வமாக சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலா, அதன் பின் கொரோனாவில் இருந்தும் முழுமையாக விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூருவில் சசிகலாவுக்கு வரவேற்பு ஏற்பாடுகள் எதுவும் செய்ய வேண்டாமென கர்நாடக போலீசார் கூறியிருப்பதால் , தமிழக எல்லையில் இருந்து சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க அமமுக தொண்டர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

திங்கள் 25 ஜன 2021